பொது செய்தி

தமிழ்நாடு

கோவை கல்லுாரிகளில் துாய்மைப்பணி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை:கல்லுாரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கோவை கல்லுாரிகளில் துாய்மைப்பணி தீவிரமாக நடந்து வருகின்றன.கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகள் திறப்படும் என, அறிவிக்கப்பட்டது.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், மாணவர்கள்
 கோவை கல்லுாரிகளில் துாய்மைப்பணி

கோவை:கல்லுாரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கோவை கல்லுாரிகளில் துாய்மைப்பணி தீவிரமாக நடந்து வருகின்றன.கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகள் திறப்படும் என, அறிவிக்கப்பட்டது.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், மாணவர்கள் படிப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வகுப் பறைகள் இருக்கைகள் வளாகம் முழுவதும் கிருமி நாசினியால் துாய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.கோவையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோது கோவை அரசு கலை கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ளதால், நோயாளிகள் அங்கு அனுமதியாகவில்லை. இதையடுத்து கல்லுாரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட பரிசோதனை கூடம், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தினுள் மாற்றப்பட்டது.நேற்று கல்லுாரி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, துாய்மைப்படுத்தப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிமுறைகள் குறித்து வாட்ஸ்-ஆப் வாயிலாக தகவல் அனுப்பப்படுகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதாக, கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X