பொது செய்தி

தமிழ்நாடு

கோவை மாவட்டத்தில் நகை, ஜவுளி கடைக்கு சனி, ஞாயிறு தடை: கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை;கொரோனா பரவல் தடுக்க கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட உள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நகைக்கடை, துணிக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.நாளை செப்.,1ல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும் நிலையில், கோவை மாவட்டத்தில் தளர்வுகள் அப்படியே இருக்கலாமா, கூடுதல் கட்டுப்பாடுகளை அமல் செய்யலாமா என்று கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்

கோவை;கொரோனா பரவல் தடுக்க கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட உள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நகைக்கடை, துணிக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.நாளை செப்.,1ல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும் நிலையில், கோவை மாவட்டத்தில் தளர்வுகள் அப்படியே இருக்கலாமா, கூடுதல் கட்டுப்பாடுகளை அமல் செய்யலாமா என்று கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். வர்த்தக சங்கத்தினர், ஜவுளி வியாபாரிகள் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், கல்வி நிறுவனத்தினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.முடிவில் நாளை செப்.,1 முதல் கோவை மாவட்டத்தில் கீழ்க்கண்ட கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.l கோவை மாநகரில் கிராஸ்கட் சாலை, 100 அடி ரோடு, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லுார் சிக்னல் முதல் ஒண்டிபுதுார் மேம்பாலம் வரை, ஹோப் காலேஜ் சிக்னல், காளப்பட்டி ரோடு, டி.பி.ரோடு திருவேங்கடசாமி ரோடு, என்.எஸ்.ஆர்., ரோடு, ஆரோக்கியசாமி ரோடு (கிழக்கு, மேற்கு), சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பஸ்ஸ்டாண்ட் சந்திப்பு, துடியலுார் சந்திப்பு மார்க்கெட் கடைகள், பீளமேடு ரொட்டிக்கடை மைதான கடைகள், காந்திமாநகர் சந்திப்பு, ஆவாரம்பாளையம் சந்திப்பு, பாரதி நகர் கணபதி, பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பு, ராஜ வீதி, பெரியகடைவீதி, வெரைட்டி ஹால் வீதி, என்.எச்.ரோடு, இடையர்வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, சுக்கிரவார்பேட்டை வீதி, மரக்கடை வீதி, ரங்கே கவுடர் வீதி, காந்திபுரம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 தெருக்கள், சலிவன் வீதி ஆகிய தெருக்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.l மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகள், துணிக்கடைகள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.l அனைத்து பூங்காங்களிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.l அனைத்து மால்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.l மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர, பிற கடைகள் அனைத்தும் இரவு 10:00 மணிக்கு மூடப்படுவதற்கு ஏதுவாக வாடிக்கையாளர்களை இரவு 8:00 மணி அளவில் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் அனைத்து பணியாளர்களும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருப்பதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.l மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், பேக்கரிகள் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. 50 சதவீதம் கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும்.l உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீதம் கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அனைத்து வார சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி மாட்டுச்சந்தை தற்காலிகமாக இயங்க தடை விதிக்கப்படுகிறது.l கேரளாவில் இருந்து பள்ளி, கல்லுாரிகளுக்கு வந்து செல்லும் மாணவர்கள், தினசரி வந்து செல்ல அனுமதியில்லை. கேரளாவில் இருந்து கல்வி பயில வரும் மாணவ, மாணவியர், தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றும் வைத்திருக்க வேண்டும்.l திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துவோர், ஒரு வாரம் முன்பே தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 50 நபர்களுக்கு மிகாமல் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம்.இவ்வாறு, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X