பொது செய்தி

தமிழ்நாடு

1,069 வனவிலங்குகள் 2 ஆண்டுகளில் மீட்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை:இலவச எண்ணுக்கு வந்த அழைப்புகள் மூலம், 1,069 வனவிலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.கோவை வனச்சரகத்தில், வனம், வனத்தை ஒட்டியுள்ள நிலங்களில் சமூகவிரோதிகள் வேட்டையாடுவது, மது அருந்துவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கோடைகாலத்தில் காடுகளில் தீ வைப்பு சம்பவங்களும் நடக்கின்றன.கடந்த, 2018ல், வனத்துறை சார்பில் 1800 425 45456 என்ற இலவச எண்

கோவை:இலவச எண்ணுக்கு வந்த அழைப்புகள் மூலம், 1,069 வனவிலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.கோவை வனச்சரகத்தில், வனம், வனத்தை ஒட்டியுள்ள நிலங்களில் சமூகவிரோதிகள் வேட்டையாடுவது, மது அருந்துவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கோடைகாலத்தில் காடுகளில் தீ வைப்பு சம்பவங்களும் நடக்கின்றன.கடந்த, 2018ல், வனத்துறை சார்பில் 1800 425 45456 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளில் வந்த, 1,624 அழைப்புகள் வாயிலாக, 1,069 வனவிலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில்,'' வனவிலங்குகள் ஊருக்குள் வருவதையும், மனித-விலங்கு மோதல் ஏற்படாமல் தடுக்கவும், வேட்டைத்தடுப்பு காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். சமூகவிரோதிகள் குறித்து தகவல் தெரிந்தால் வனத்துறையின் இலவச எண்ணுக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X