சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனை இ.மு., முற்றுகை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை:ரத்தினபுரியை சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மகன் ஜெயசிங், 24. இந்து முன்னணி நிர்வாகியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றோரு நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. புகாரின் பேரில் ஜெயசிங்கை, ரத்தினபுரி போலீசார் அழைத்து சென்றனர்.தகவல் அறிந்ததும், சாய்பாபாகாலனி போலீஸ் ஸ்டேஷனை நேற்று இரவு, 100க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர், திடீரென

கோவை:ரத்தினபுரியை சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மகன் ஜெயசிங், 24. இந்து முன்னணி நிர்வாகியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றோரு நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. புகாரின் பேரில் ஜெயசிங்கை, ரத்தினபுரி போலீசார் அழைத்து சென்றனர்.தகவல் அறிந்ததும், சாய்பாபாகாலனி போலீஸ் ஸ்டேஷனை நேற்று இரவு, 100க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர், திடீரென முற்றுகையிட்டனர்.அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க, ஏராளமான போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ஜெயசிங் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என, இந்து முன்னணியினர் வலியுறுத்தினர். உயர் அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X