பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரிகையாளர் நலன் பாதிக்காத வகையில் பிரஸ் கவுன்சில்: செய்தித்துறை அமைச்சர்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஈரோடு:''பத்திரிகையாளர் நலன் பாதிக்காத வகையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்கப்படும்,'' என்று, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் மதிப்பாய்வு குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:கொப்பரை தேங்காய்க்கு பதிலாக, தேங்காயை மத்திய அரசு நேரடி

ஈரோடு:''பத்திரிகையாளர் நலன் பாதிக்காத வகையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்கப்படும்,'' என்று, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் மதிப்பாய்வு குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:கொப்பரை தேங்காய்க்கு பதிலாக, தேங்காயை மத்திய அரசு நேரடி கொள்முதல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.போலி பத்திரிகையாளர்களை களைவதற்கு, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அறிந்தோம். அதற்கான முழு விபரமும் எங்களுக்கு வந்து சேரவில்லை. அது கிடைத்தவுடன் முதல்வரிடம் பேசி, பத்திரிகையாளர் நலன் பாதிக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும்.வால்பாறை பகுதிகளில் தொலைத்தொடர்பு, இணையதள பிரச்சனை உள்ளது. ஈரோடு மாவட்டம் பர்கூர், கடம்பூர் மலைப்பகுதியிலும் இதே பிரச்னை உள்ளது. மாநில அரசு மூலம் நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியையும் பெற்று நடவடிக்கை எடுப்போம். ஊரக வளர்ச்சி துறைகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நூலகம் செயல்படுத்தப்பட்டது. தற்போது அதை மீண்டும் செயல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X