சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானையை சுட்டுக் கொன்று தந்தம் திருட்டு: வேட்டை கும்பல் அட்டகாசம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அருகே வனப்பகுதியில், துப்பாக்கியால் யானை சுடப்பட்டு, தந்தம் திருடப்பட்ட சம்பவத்தால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்தில், அடர்ந்த வனப்பகுதியான சடையன்பாறை பகுதியில், 34 வயதுடைய ஆண் யானை உடல், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன்,

உடுமலை:உடுமலை அருகே வனப்பகுதியில், துப்பாக்கியால் யானை சுடப்பட்டு, தந்தம் திருடப்பட்ட சம்பவத்தால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்தில், அடர்ந்த வனப்பகுதியான சடையன்பாறை பகுதியில், 34 வயதுடைய ஆண் யானை உடல், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன், உதவி இயக்குனர் கணேஷ்ராம் உள்ளிட்ட அதிகாரிகள், கால்நடை டாக்டருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். யானை உடலை மருத்துவப்பரிசோதனை செய்தனர்.யானை உடலில், பல இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்களும், வேட்டைத்துப்பாக்கியில் பயன்படுத்தப்படும், இரும்பு குண்டுகளும் இருந்தன. யானையின் வலதுபுறம் இருந்த தந்தம் திருடப்பட்டிருந்தது. இடதுபுறம் மண்ணில் புதைந்திருந்த தந்தத்தை வனத்துறையினர் மீட்டனர்.வனத்துறை மோப்ப நாய் 'கடுவன்' உதவியுடன் வனப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ட்ரோன் உதவியுடன், அடர்ந்த வனப்பகுதியில் வேட்டை கும்பல் வந்த தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக - கேரளா எல்லை வனப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. யானையின் உடலில் துப்பாக்கியால் சுட்ட தடயம் உள்ளதால், கடத்தல் கும்பல் கைவரிசை என தெரியவந்துள்ளது. உதவி வனப்பாதுகாவலர் தலைமையில், சிறப்பு படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X