பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., அதிகாரியிடம் ஏற்றுமதியாளர் முறையீடு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஏற்றுமதியாளர்களுக்கு, 80 சதவீத ரீபண்ட் தொகையை விடுவிக்க வேண்டும் என, ஏ.இ.பி.சி., வலியுறுத்தியுள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல், கோவை, மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரித்துறை முதன்மை கமிஷனர் குமாரை, நேற்று நேரில் சந்தித்தார்.'ரிஸ்கி எக்ஸ்போர்ட்டர்' பட்டியலில் உள்ளவர்களுக்கு, 'ஜி.எஸ்.டி., ரீபண்ட்' தொகைகள் கிடைப்பதில்
 ஜி.எஸ்.டி., அதிகாரியிடம் ஏற்றுமதியாளர் முறையீடு

திருப்பூர்:ஏற்றுமதியாளர்களுக்கு, 80 சதவீத ரீபண்ட் தொகையை விடுவிக்க வேண்டும் என, ஏ.இ.பி.சி., வலியுறுத்தியுள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல், கோவை, மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரித்துறை முதன்மை கமிஷனர் குமாரை, நேற்று நேரில் சந்தித்தார்.'ரிஸ்கி எக்ஸ்போர்ட்டர்' பட்டியலில் உள்ளவர்களுக்கு, 'ஜி.எஸ்.டி., ரீபண்ட்' தொகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இவர்களுக்கு, 80 சதவீத 'ரீபண்ட்' தொகையை உடனடியாக வழங்கவேண்டும். இப்பட்டியலில் இருந்து விடுபட்டவுடன், மீதமுள்ள தொகையை வழங்கவேண்டும். சலுகையை முழுமையாக நிறுத்திவைத்தால், ஆடை உற்பத்தி துறை சார்ந்த ஏராளமான ஏற்றுமதியாளர்கள், தொழிலை விட்டு வெளியேறிவிடுவர்' என, வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X