பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் தடை செய்ய சட்டம்: முதல்வர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் தடை செய்ய சட்டம்: முதல்வர்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (36)
Share
சென்னை: தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனைக்கு தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சட்டசபையில் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ., ஜி.கே.மணி கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதில்: தமிழகத்தில் குட்கா விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்த குட்கா பொருள் விற்பனை செய்வோர், கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை
குட்கா, முதல்வர்,ஸ்டாலின், சட்டசபை

சென்னை: தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனைக்கு தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சட்டசபையில் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ., ஜி.கே.மணி கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதில்: தமிழகத்தில் குட்கா விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்த குட்கா பொருள் விற்பனை செய்வோர், கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் போலீசாரை ஊக்குவிக்க தமிழக அரசு தயங்காது.
இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இது தொடர்பாக, 11,247 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news





10 ஆண்டுக்கு பின் பதில்


சட்டசபையில், கேள்வி நேரத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின் போது, 10 ஆண்டுகளாக, முதல்வர் துறை சார்ந்த கேள்விகள், கேள்வி நேரத்தில் இடம்பெற்றது இல்லை. இதனால், கேள்வி நேரத்தில் முதல்வர் துறைசார்ந்த கேள்விகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, தற்போது, ஸ்டாலின் அளித்து உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X