சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்பமாக சென்று வீடுகளில் 'கைவரிசை': பெண்கள் உட்பட நான்கு பேர் கைது

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை;கோவையில் அதிகாலை நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டி வந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை மாநகர பகுதியில், கடந்த சில மாதங்களாக வீடுகளுக்குள் புகுந்து மொபைல்போன்கள், நகை, பணம் போன்றவற்றை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. வெரைட்டிஹால் ரோடு, ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளில் இருந்து, தொடர் புகார்கள்
 குடும்பமாக சென்று வீடுகளில் 'கைவரிசை': பெண்கள் உட்பட நான்கு பேர் கைது

கோவை;கோவையில் அதிகாலை நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டி வந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை மாநகர பகுதியில், கடந்த சில மாதங்களாக வீடுகளுக்குள் புகுந்து மொபைல்போன்கள், நகை, பணம் போன்றவற்றை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. வெரைட்டிஹால் ரோடு, ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளில் இருந்து, தொடர் புகார்கள் வந்ததால் தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த கிருஷ்ணவேணி, 46, அவரது மகன்கள் ஆனந்த், 27, ரமேஷ், 25, ஆனந்தின் மாமியார் சுருளியம்மாள், 40 என்பதும், இவர்கள் பேரூரில் தங்கி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து நான்கு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.தனிப்படை போலீசார் கூறியதாவது:திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு வேலை தேடி வந்த கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன்கள் பேரூரில் வீடு எடுத்து தங்கினர். கூலி வேலைக்கு சென்று போதிய வருமானம் கிடைக்காததால் திருட்டில் ஈடுபட முடிவு செய்து இறங்கினர். இவர்களுடன் சுருளியம்மாளும் இணைந்து கொண்டார். பேரூரில் பல்வேறு வீடுகளில் திருடியுள்ளனர்.
அதிகாலை நேரத்தில் திருடிவிட்டு, பகல் நேரத்தில் கூலி வேலைக்கு சென்றுவிடுவர். 'வாக்கிங்' செல்வது போல் நடந்தே செல்வார்கள். பின், அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை கண்காணித்து, எந்த வீட்டின் கதவு திறந்து இருக்குமோ அந்த வீடுகளுக்குள் புகுந்து மொபைல்போன் முதல் எது கிடைத்தாலும் திருடி செல்வது வழக்கம்.கடந்த, ஆறு மாதமாக பல்வேறு இடங்களில் வெள்ளி பொருட்கள், மொபைல்போன் என, கைவரிசை காட்டியுள்ளனர். திண்டுக்கல்லிலும் இதுபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharma - Madurai,இந்தியா
01-செப்-202108:19:21 IST Report Abuse
Dharma பல நாள் திருடன் ஒரு நாள் ..............
Rate this:
A P - chennai,இந்தியா
01-செப்-202118:23:30 IST Report Abuse
A Pபல நாள் என்பது கடந்த அறுபது வருட காலமா திரு தர்மா அவர்களே....
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
04-செப்-202111:22:13 IST Report Abuse
தஞ்சை மன்னர் இன்னொரு திருடன் கனத்த 7 வருடமாக தனக்கு கீழ இருக்கும் பலரை திருடவிட்டு பார்த்து கொண்டு இருக்கான் ஆனால் சிக்கும் பொது தெரியவரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X