பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் இயக்க கோரிக்கை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை:கேரள-தமிழகம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று கேரளத் தமிழ் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதன் பொதுச்செயலாளர் பேச்சிமுத்து, தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:கேரள - தமிழக எல்லையோர மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு மாநில பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும்.பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம்,

கோவை:கேரள-தமிழகம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று கேரளத் தமிழ் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதன் பொதுச்செயலாளர் பேச்சிமுத்து, தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:கேரள - தமிழக எல்லையோர மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு மாநில பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும்.பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் வயநாடு பகுதிகளுக்கு தமிழகத்திலிருந்து மீண்டும் பஸ் இயக்கவேண்டும்.கேரள பஸ்களும் தமிழகத்துக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்கும் பயணிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்திய பயணிகள் மட்டும் பஸ்களில் பயணிக்க அனுமதி வழங்கலாம்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X