லாரி மீது அரசு விரைவு பஸ் மோதல்: 15 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது அரசு விரைவு பஸ் மோதல்: 15 பேர் படுகாயம்

Added : ஆக 31, 2021
Share
ஆத்தூர்: ஆத்துார் அருகே நின்றிருந்த லாரி மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் டிரைவர், கண்டக்டர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, சம்பேரி பஸ் ஸ்டாப் பகுதியில் லாரி ஒன்று சாலையோரம் நின்றிருந்தது. இன்று, காலை, 5:45 காலை, மணி அளவில் சென்னையில் இருந்து, சேலம் நோக்கிச் சென்ற அரசு விரைவு பஸ், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதி
லாரி மீது அரசு விரைவு பஸ் மோதல்: 15 பேர் படுகாயம்

ஆத்தூர்: ஆத்துார் அருகே நின்றிருந்த லாரி மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் டிரைவர், கண்டக்டர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, சம்பேரி பஸ் ஸ்டாப் பகுதியில் லாரி ஒன்று சாலையோரம் நின்றிருந்தது. இன்று, காலை, 5:45 காலை, மணி அளவில் சென்னையில் இருந்து, சேலம் நோக்கிச் சென்ற அரசு விரைவு பஸ், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர், பயணிகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அப்பகுதியினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பஸ்சின் முன்புறம் அதிகளவில் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X