உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 9 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: உச்சநீதிமன்றத்திற்கு மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளும் இன்று (ஆக.,31) பதவியேற்றனர்.உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 34. இதில் எட்டு பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், சமீபத்தில் இரு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24ஆக குறைந்தது. நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்ப தலைமை

புதுடில்லி: உச்சநீதிமன்றத்திற்கு மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளும் இன்று (ஆக.,31) பதவியேற்றனர்.

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 34. இதில் எட்டு பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், சமீபத்தில் இரு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24ஆக குறைந்தது.



latest tamil news



நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்ப தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி பணியிடங்களுக்கான பெயர்களை இறுதி செய்தது. அதில், 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கொலீஜியம் பரிந்துரைத்த 9 நீதிபதிகளையும் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.

அதன்படி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஷ்வரி, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகர்த்தனா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.


latest tamil news



உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 9 நீதிபதிகளுக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக 9 நீதிபதிகள் ஒரேநேரத்தில் இன்று பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-செப்-202109:22:46 IST Report Abuse
அப்புசாமி எத்தனை நீதிபதிகள் வந்தா என்ன? எந்ர கேசிலும் தீர்ப்பு வர ஒரு 10 வருஷமாவது ஆகும். இல்லே, தகைமை நீதிபதி ரிடையர் ஆகும்போது பரபரன்னு 10 கேசில் தீர்ப்பு சொல்லிடுவாங்க.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
31-ஆக-202118:08:23 IST Report Abuse
Vena Suna ஒன்பது கிரஹங்களும் ஒண்ணா வந்தா மாதிரி
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
31-ஆக-202117:55:29 IST Report Abuse
JeevaKiran இனிமேலும் காலதாமதம் இல்லாமல் தீர்ப்பை உடனடியாக சொல்லுவீர்கள் என்று நம்பலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X