அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., பல்கலை இணைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு; தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ.,க்கள் கைது

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலை உடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்து, தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை
ஜெயலலிதா, பல்கலைக்கழகம், இணைப்பு, மசோதா, அண்ணாமலை_பல்கலைக்கழகம், சட்டசபை, அதிமுக, எதிர்ப்பு, வெளிநடப்பு, தர்ணா, கைது

சென்னை: ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலை உடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்து, தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழக்கத்துடன் இணைக்கும் மசோதா சட்டசபையில் இன்று (ஆக.,31) தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இம்மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு அ.தி.மு.க., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


latest tamil news


பின்னர், கலைவாணர் அரங்கை விட்டு வெளியேறிய எம்.எல்.ஏ.,க்கள் அரங்கம் முன்பு இருந்த சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
31-ஆக-202119:33:51 IST Report Abuse
Mohan நாளுக்கு ஒரு புது சட்டை தைத்து பொடுவாய்ங்களோ.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
31-ஆக-202115:43:48 IST Report Abuse
Vena Suna இம் என்றால் வன வாசம் ஏன் என்றால் சிறை வாசம் அருமையான ஆட்சி
Rate this:
zakir hassan - doha,கத்தார்
31-ஆக-202117:13:58 IST Report Abuse
zakir hassanஇந்த திருட்டு கூட்டத்தை பாத்து நாளைக்கு உள்ளே வைத்து அனுப்பவும் அப்படி செய்தால் அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா பரவழைத்த தடுக்கலாம்...
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
31-ஆக-202115:30:19 IST Report Abuse
E. RAJAVELU இந்த போராட்டத்தில் அதிமுகவின் பல MLA க்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதான் ஜெயலலிதா மேல் அவர்கள் கொண்டுள்ள பாசம். எல்லாம் வேஷம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X