பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா தடை நீக்க வேண்டும்: இந்து முன்னணி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவை மாவட்ட இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்ற விநாயகர் சதுர்த்தி மக்கள் விழாவை தமிழக அரசு தடை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கொரோனா காரணம் என்று அரசு கூறியிருப்பது திட்டமிட்ட சதி. ஏனென்றால், கடந்த ஆண்டு கொரோனா பரவல்
விநாயகர் சதுர்த்தி விழா தடை நீக்க வேண்டும்: இந்து முன்னணி

கோவை: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவை மாவட்ட இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்ற விநாயகர் சதுர்த்தி மக்கள் விழாவை தமிழக அரசு தடை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கொரோனா காரணம் என்று அரசு கூறியிருப்பது திட்டமிட்ட சதி. ஏனென்றால், கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது கூட இந்து முன்னணி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து சிறப்பான முறையில் மக்களுடன் கொண்டாடியது. அதன் காரணமாக எவ்வித தொற்றுப் பரவலும் ஏற்படவில்லை.
இந்த ஆண்டு தொற்று குறைந்துள்ளது. அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனாலும் தமிழக அரசு விரோத போக்குடன் இந்துக்களின் விழாக்களை மட்டும் தடை செய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது பெரிய இடங்களில் பந்தல் அமைத்து சமூக இடைவெளி கூட இல்லாமல் தொழுகை நடந்தது. இந்த அரசோ, அதிகாரிகளோ எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை, கண்டுகொள்ளவில்லை.
அதேபோல கிறிஸ்தவர்களின் தூத்துக்குடி பனிமாதா சர்ச்சில் 10 நாட்கள் மிக பிரம்மாண்டமான திருவிழா நடைபெற்றது. இந்த அரசு அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது. பல இடங்களில் நடைபெற்ற பல கிறித்தவ விழாக்களை கண்டுகொள்ளாமல் இருந்தது தமிழக அரசு.
ஆனால், இந்துக்கள் ஆடிப்பெருக்கன்று நீர் நிலைகளில் வழிபாடு செய்ய தடை விதித்தது. ஆடி அம்மாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதித்தது. மாதந்தோறும் நடக்கின்ற பல்வேறு ஆலய வழிபாட்டு உற்சவங்களை தடை செய்துள்ளது.
தமிழகத்தில் தொற்று குறைந்திருக்கிறது என்று பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறந்து விடுகிறது. ஆனால், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு தடை விதிப்பது முழுக்க முழுக்க இந்து விரோதம் தான்.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எப்படி நடத்த வேண்டும்? என்று அனைத்து சமய அமைப்புகள் மற்றும் ஆன்மீக பெரியவர்களிடம் அரசு கருத்துகளைக் கேட்டது. சில கட்டுப்பாடுடன் விழா நடைபெற்றது. ஆனால் தி.மு.க., அரசு ஆன்மீக பெரியவர்களிடம் கலந்தாலோசிக்காமல் சர்வாதிகாரமாக அறிவித்துள்ளது.
இந்துக்கள் அனைவரும் வீட்டில் வைத்து வழிபாடு நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. நமது கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்கும் அரசு என்பதற்கு இது ஒன்றே போதும். வீடுகளில் வழிபட்ட விநாயகரை கொண்டு வந்து கோவில் சுவர்கள் மீதும், கோவில் வளாகத்திலும் வைத்தால் அறநிலையத்துறை அதை அப்புறப்படுத்தும் என்றும் கூறியுள்ளது. அப்புறப்படுத்த விநாயகர் குப்பைப் பொருளா?. இது இந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கை. பக்தர்கள் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. மக்களின் வழிபாட்டு உரிமையை இந்த அரசு கொச்சைப்படுத்துகிறது.
எனவே, விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்கின்ற இந்து விரோத போக்கை கண்டித்து வருகின்ற 2ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்துக் கோவில்களிலும் மக்கள் இறைவனிடம் முறையிட்டு வேண்டுதல் செலுத்துவார்கள். இந்த அரசு உடனடியாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொண்டு சமூக இடைவெளியுடன் மக்கள் விழாவைக் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X