தெலுங்கானாவில் பள்ளிகளை திறக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானாவில் நாளை (செப்., 1) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையால் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள்

ஐதராபாத்: தெலுங்கானாவில் நாளை (செப்., 1) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.



latest tamil news



கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையால் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோவிட் பாதிப்பு குறைந்தபோதிலும், 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து உள்ளதால், கல்வி நிலையங்கள் திறக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் நாளை (செப்., 1) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், அம்மாநில அரசின் அறிவிப்பிற்கு தடை விதித்துள்ளனர். தெலுங்கானாவில் கோவிட் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 29ம் தேதி நிலவரப்படி, புதிதாக 257 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
31-ஆக-202119:28:17 IST Report Abuse
Mohan மெய்யாலுமே உயர்ந்த நீதிமன்றம்தான்.
Rate this:
Cancel
rajasekaran - neyveli,இந்தியா
31-ஆக-202113:13:02 IST Report Abuse
rajasekaran தமிழ்நாட்டிலும் ஒருவர் உடன் ஹை கோர்ட்டுக்கு போக வேண்டும்.
Rate this:
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
31-ஆக-202119:01:29 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் அப்பவும் நீ போகாதே இவனா பொன்னான அதில் குளிர் காயும் கூடமா , அவா வா நீ அவன்தான் எதையும் செய்யாமல் அடுத்தவன் செய்வத பார் பாண்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X