தெலுங்கானாவில் பள்ளிகளை திறக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

தெலுங்கானாவில் பள்ளிகளை திறக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (3)
Share
ஐதராபாத்: தெலுங்கானாவில் நாளை (செப்., 1) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையால் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள்

ஐதராபாத்: தெலுங்கானாவில் நாளை (செப்., 1) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.



latest tamil news



கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையால் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோவிட் பாதிப்பு குறைந்தபோதிலும், 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து உள்ளதால், கல்வி நிலையங்கள் திறக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் நாளை (செப்., 1) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், அம்மாநில அரசின் அறிவிப்பிற்கு தடை விதித்துள்ளனர். தெலுங்கானாவில் கோவிட் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 29ம் தேதி நிலவரப்படி, புதிதாக 257 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X