அரசியல் செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் பதிலளித்த முதல்வர்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகள் இடம்பெறாமல் இருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கேள்வி நேரத்தில் முதல்வர் பதிலளித்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில், தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலமாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெறாமல் இருந்தது. தற்போது, கேள்வி
TNAssembly, TamilnaduCM, Question Time, Stalin, Replied, முதல்வர், ஸ்டாலின், கேள்விநேரம், சட்டசபை

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகள் இடம்பெறாமல் இருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கேள்வி நேரத்தில் முதல்வர் பதிலளித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில், தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலமாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெறாமல் இருந்தது. தற்போது, கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது. இதையடுத்து, இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக பா.ம.க., எம்.எல்.ஏ., மணியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.


latest tamil news


ஸ்டாலின் அளித்த பதிலில், தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டசபையில் உறுதி அளித்தார். மேலும், போதைப் பொருள் விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். கல்வி நிறுவனங்கள் அருகே குட்கா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தமிழக சட்டசபையில் 10 ஆண்டுகளுக்குப் பின் கேள்வி நேரத்தின் போது தனது துறை சார்ந்த கேள்வி ஒன்றுக்கு முதல்வர் பதிலளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna - Chennai,இந்தியா
31-ஆக-202117:34:57 IST Report Abuse
Guna வகிக்கும்பதவியை சீரியவகையில் நிர்வாகம் செய்து துறையில் உள்ள நுணுக்கங்களை இறங்கிவந்து அறிந்து செயலாற்றுபவர்கள் தைரியமாக பதில் சொல்வார்கள். கீழ்த்தரமான அரசியல் செய்பவர்களை கேள்வி கேட்டுவிட்டால் ஏடாகூடமாக பதில் சொல்லி கோமாளியாகிவிடக்கூடாதில்லையா ?
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
31-ஆக-202117:16:21 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இறைவன் இல்லை என்று சொல்பவர்களுக்கு, இறைவனின் திருவிளையாடலைப் பற்றி என்ன தெரியும்?
Rate this:
Cancel
31-ஆக-202116:35:59 IST Report Abuse
ஆரூர் ரங் முதல் பதிலே சொதப்பபல் 😆. முற்றும் கோணல். அதென்ன பள்ளிகள் அருகே மட்டும் போதை 😇😇பொருள் விற்க தடை? மற்ற இடங்களில் விற்றால் தண்டனை இல்லையா? இது போல் உளறுவதற்கு பதில் பதிலே கூறாமல் இருந்திருக்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X