உ.பி.,யில் டெங்கு: 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உ.பி.,யில் டெங்கு: 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (6)
Share
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டதில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி செய்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் கடந்த ஆக., 24 ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்மகாய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர். பின் மர்ம காய்ச்சலின் அறிகுறியும்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டதில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி செய்துள்ளார்.



latest tamil news



உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் கடந்த ஆக., 24 ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்மகாய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர். பின் மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால், அதை டெங்கு காய்ச்சல் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின் மதுரா, ஆக்ரா, மற்றும் ராஜஸ்தானின் பரத்பூர் பகுதிகளில் மர்ம காய்ச்சலால் 80 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.


latest tamil news



இந்நிலையில் பிரோசாபாத் மாவட்டத்தில் மருத்துவமனைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட, முதல்வர் யோகி ஆதித்யநாத், 'இதுவரை டெங்கு காய்ச்சலால் 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலியாகினர். காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபவர்களும் அதிகரித்து இருப்பதால், தனி பிரிவை ஒன்றை ஏற்படுத்தி மாவட்ட மருத்துவமனை அவர்களுக்கு தீவிர சிகிச்சையை அளித்து வருகிறது' என்றார்.

'கடுமையாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு தொடர்ந்து பெய்த கனமழையும் அதனால் உருவான சுகாதார சீரழிவுமே காரணம்' என, அம்மாநில சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X