கந்திலி ஒன்றியத்தில் 39 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கந்திலி ஒன்றியத்தில் 39 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

Added : ஆக 31, 2021
Share
திருப்பத்துார்: கந்திலி ஒன்றியத்தில் 39 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்துார் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் செயல்பட்டு வந்த 39 ஊராட்சி செயலாளர்கள் மீது, 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், துாய்மை இந்தியா கழிவறை திட்டம் போன்றவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக

திருப்பத்துார்: கந்திலி ஒன்றியத்தில் 39 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் செயல்பட்டு வந்த 39 ஊராட்சி செயலாளர்கள் மீது, 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், துாய்மை இந்தியா கழிவறை திட்டம் போன்றவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து 39 ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல் இன்று உத்தரவிட்டார். ஒரே நாளில் 39 ஊராட்சி செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலளார்கள் 24 மணி நேரத்தில் பணியில் சேர்ந்து விட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் விவரம் வருமாறு: அத்தியூர் ஊராட்சி செயலாளர் ரமேஷ் குனிச்சிக்கு மாற்றப்பட்டார். அதே போல ஆவல் நாயக்கன்பட்டி பெருமாள் காக்கன்கரைக்கும், சின்ன கந்திலி மைதிலி நரியனேரிக்கும், சின்ன கசிய நாயக்கன்பட்டி சின்னவேடி உடையாமுத்துாருக்கும், சின்னாலம்பட்டி நர்மதா தின்னம புதுாருக்கும், கிழக்கு பதனவாடி கலைச்செல்வம் லக்கி நாயக்கன்பட்டிக்கும், எலவம்பட்டி ராஜமாணிக்கும் ப. முத்தகம்பட்டிக்கும், எர்ரம்பட்டி சேகர் கெஜல் நாயக்கன்பட்டிக்கும், அங்கிருந்த அப்துல் கரிம் கந்திலிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கும்மிடிகாம்பட்டி ராஜேந்திரன் சு. பள்ளிப்பட்டிற்கும், காக்கங்கரை சதீஷ் ஆவல நாயக்கன்பட்டிக்கும், கந்திலி சுப்பிரமணி எர்ரம்பட்டிக எர்ரம்பட்டிக்கும், கரிநாயக்கன்பட்டி துரைமுருகன் மாணவள்ளிக்கும், கொரட்டி தமிழ்செல்வி சின்ன கசியன் நாயக்கன்பட்டிக்கும், குனிச்சி கருணாநிதி கிழக்கு பதனவாடிக்கும், குரும்பேரி சதிஷ் மட்டரப்பள்ளிக்கும், லக்கி நாயக்கன்பட்டி ஜோதீஸ்வர் நாசராம்பட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் செயல்பட்டு வந்த 39 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X