பொது செய்தி

இந்தியா

தமிழகத்திற்கு 30.6 டி.எம்.சி., நீரை உடனே திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம், டில்லி மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்டார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர்,
காவிரி, மேலாண்மை ஆணையம், தமிழகம், கர்நாடகா

புதுடில்லி: கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம், டில்லி மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்டார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர், ஆணையத்தின் உறுப்பினர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பங்கேற்றனர்.


latest tamil news


கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்தது. கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி., நீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய 30.6 டி.எம்.சி., நிலுவையை உடனே திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் காவிரியில் உடனே திறக்கவும் ஆணையம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-செப்-202112:53:41 IST Report Abuse
ஆரூர் ரங் உண்மையில் இது உத்தரவே இல்லை.திறந்து விட வேண்டுகோள்🥲 மட்டுமே . மற்ற மொழி செய்திகளில் அப்படிதான் உள்ளது
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
31-ஆக-202123:09:44 IST Report Abuse
M  Ramachandran கர்நாடக அரசு எல்லாவற்றிற்கும் பேப்ப காட்டும். நீதிமன்ற உத்தரவுகளையென காற்றில் பறக்க விடுகின்றன. இந்த வாரியம் எல்லாம் அவர்களுக்கு ஜூ ஜூ பி.
Rate this:
Cancel
31-ஆக-202121:42:36 IST Report Abuse
அப்புசாமி புது விடியல் அரசு எப்புடி நீட் தேர்வை ரத்து செய்ய முடியாதோ, அதே போல் காவிரிநீரும் நமக்கு கிடைப்பது கஷ்டம். மானாவாரியா பெருமழை பொழிந்தால் சாத்தியம். அதேபோலொன்றிய அரசை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோற்கடித்தால் 39 எம்.பி க்களை வெச்சுக்கிட்டு நீட் தேர்வு ரத்து பேரம் பேசலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X