பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: உறவினர் கைது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சேலம்: சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது பள்ளப்பட்டி. இங்குள்ள சாமிநாதபுரம் அமல்ராஜ் தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத், 29. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஐந்து வருடத்திற்கு முன் திருமணம்

சேலம்: சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது பள்ளப்பட்டி. இங்குள்ள சாமிநாதபுரம் அமல்ராஜ் தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத், 29. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஐந்து வருடத்திற்கு முன் திருமணம் ஆனது. பிரியதர்ஷினியின் தம்பி பாலமுருகன் அக்காவுடன் தங்கி இருந்தார்.
பாலமுருகன் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளார். ஆனால், வேலை ஏதும் அவருக்கு கிடைக்கவில்லை. வேலைக்கு எதுவும் செல்லாத பாலமுருகன் தினமும் இரவில் மதுஅருந்தி வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். இதை அறிந்த அவரது மாமா கோகுல்நாத், பாலமுருகனை அவ்வப்போது கண்டித்து வந்தார். இதனால் அவர்களிடையே வாய்த்தகராறு இருந்தது. இவர்களை உறவினர்கள் சமாதானம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவும் பாலமுருகன் மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்து அவரது அக்கா பிரியதர்ஷனியிடம் வாய் தகராறில் ஈடுபட்டார். இதில், கோபமடைந்த கோகுல்நாத், பாலமுருகனை அழைத்து கண்டித்தார். பிறகு கோகுல்நாத்தும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவர்களது தனியறையில் படுத்து தூங்கினர்.
இன்று அதிகாலை கோகுல்நாத் எழுந்து கழிவறை செல்ல வெளியில் வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த பாலமுருகன், "மதுஅருந்தி விட்டுத்தான் வருவேன்; இனி நீங்கள் கேட்கக்கூடாது" என தெரிவித்தான். இதனால் அவர்கள் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில், கோபம் அடைந்த பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபால்நாத்தை சரமாரியாக குத்தினான். இதில், ரத்த வெள்ளத்தில் கோகுல்நாத் மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் ஓடி வந்து கோபால்நாத்தை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் கோபிநாத் இறந்துவிட்டார்.
இந்த கொலையை அறிந்த பள்ளப்பட்டி உதவி கமிஷனர் நாகராஜன், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் கோகுல்நாத்தின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமறைவான பாலமுருகனை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது பாலமுருகன் தனது மாமா கோகுல்நாத் மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வரக்கூடாது என கண்டித்தார். இதனால் கோபம் அடைந்து அவரை கொன்று விட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X