விதிமீறி கட்டப்பட்ட 40 மாடி குடியிருப்பு: இடித்து தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் விதிமீறி கட்டப்பட்ட 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பை மூன்று மாதங்களுக்குள் இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனம் அபெக்ஸ் மற்றும் சியானே என்ற இரட்டை கோபுர குடியிருப்பு திட்டத்தை தொடங்கியது. 915 குடியிருப்புகள், 21 கடைகள் அமைப்பது
குடியிருப்பு, உச்சநீதிமன்றம்,கோர்ட், உத்தரவு

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் விதிமீறி கட்டப்பட்ட 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பை மூன்று மாதங்களுக்குள் இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனம் அபெக்ஸ் மற்றும் சியானே என்ற இரட்டை கோபுர குடியிருப்பு திட்டத்தை தொடங்கியது. 915 குடியிருப்புகள், 21 கடைகள் அமைப்பது திட்டத்தின் நோக்கம். கட்டுமான பணிகளின் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளன. 633 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாதுகாப்பு, தீத்தடுப்பு, கட்டுமான திட்டம் போன்ற பல்வேறு விதிகளை மீறி மிக நெருக்கமாக இரட்டை கோபுர குடியிருப்பு அமைக்கப்பட்டதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் கட்டுமானத்தை இடிக்க 2014-ல் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சூப்பர்டெக் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


latest tamil news


கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். நொய்டா மாநகராட்சி அதிகாரிகளின் உடந்தையால் தான் விதிமீறல் சாத்தியமானதாக கண்டனம் தெரிவித்தனர். இரு அடுக்குமாடிகளுக்கு இடைப்பட்ட குறைந்தபட்ச இடைவெளி, தீ பாதுகாப்பு விதிகள், பூங்கா விதிகள் என அனைத்தும் மீறப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினர்.

ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச தூர அளவை கடைப்பிடித்துள்ளோம், மற்ற விதிகளையும் முறையாக பின்பற்றியுள்ளோம். எந்த சட்டவிரோதமும் இல்லை என வாதாடினார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இத்திட்டத்தில் வீடுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு 2 மாதங்களுக்குள் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும், கட்டடத்தை இடிப்பதற்கான செலவை மூன்று மாதங்களுக்குள் சூப்பர்டெக் ஏற்க வேண்டும் என கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-செப்-202109:19:30 IST Report Abuse
அப்புசாமி இத்தனை நாளா கட்டிடம் சின்னதா இருந்து நீதிமன்றத்தின் கண்களுக்கு தெரியலை. இப்போ பெரிய யானை மாதிரி வளர்ந்ததுக்ஜப்புறம் தான் தெரியுது. அப்பிடி ஒரு சாளேஸ்வரம்.
Rate this:
Cancel
Ramakrishnan R - kalpakkam,இந்தியா
31-ஆக-202123:29:08 IST Report Abuse
Ramakrishnan R விதிகளை மீறியிருந்தால் அவற்றை தொழில் நுட்ப ரீதியாக சரி செய்ய முடியும். கான்ட்ராக்டருக்கு மிக அதிகமான அபராதம் விதிக்கலாம். ஆனால் கட்டிடத்தை இடிக்கச் சொல்வது மிகவும் நஷ்டம் ஏற்படுத்தும் முடிவு. அதிக பட்ச அபராததால் இனி மேல் விதிகளை மீறக்கூடாது என்ற பயம் வரும். வழக்குகள் நிலுவையில் உள்ளதால், போலீஸ் ஸ்டேஷன்களில் நிறைய நல்ல வாகனங்கள் வீணாகிவிடுகின்றன. வீடுகளையும் இதே போன்று வீணாக்க வேண்டாம்.
Rate this:
hariharan - Bangalore,இந்தியா
02-செப்-202116:18:03 IST Report Abuse
hariharanஒரு கோபுரத்தை இடித்து விதிக்களை பின்பற்றலாம்...
Rate this:
Cancel
31-ஆக-202121:38:21 IST Report Abuse
அப்புசாமி சினிமா போலீஸ் ரேஞ்சுக்கு தூங்கிட்டு எல்லாம் முடியறதுக்குள்ளே வந்துட்ட நீதிமன்றத்துக்கு வாழ்த்துக்கள் நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X