மதுராவில் இறைச்சி, மது விற்பனைக்கு தடை: முதல்வர் யோகி உத்தரவு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
மதுரா: உ.பி.,யின் மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள தெய்வீக நகரங்களான ஏழு நகரங்களில் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட மதுரா வந்த யோகி ஆதித்யநாத், கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் ஜென்மபூமி கோயிலில் வழிபட்டார்.பிறகு, ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் யோகி
Yogi Adityanath, Ban, Meat, Liquor, Trade,UP, Mathura,

மதுரா: உ.பி.,யின் மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள தெய்வீக நகரங்களான ஏழு நகரங்களில் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட மதுரா வந்த யோகி ஆதித்யநாத், கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் ஜென்மபூமி கோயிலில் வழிபட்டார்.


latest tamil news


பிறகு, ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் யோகி பேசியதாவது: கடந்த 2017-ம் ஆண்டில் இங்குள்ள மக்கள் கோரிக்கையை ஏற்று, பிருந்தாவன் மற்றும் மதுரா மாநகராட்சிகள் இணைக்கப்பட்டன. இதனால், இங்குள்ள 7 தெய்வீகத்தலங்கள் புனித்தலங்களாகவும் அறிவிக்கப்பட்டது. இப்போது, அந்த 7 நகரங்களிலும் இறைச்சி, மாமிசம் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது ஏற்கப்பட்டு, இந்த ஏழு நகரங்களிலும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த இரண்டையும் விற்பனை செய்பவர்கள் மீது நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இந்த இரண்டையும் விற்பனை செய்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வேறு வருமானத்திற்கு வகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் அறிவித்த 7 நகரங்களின் பட்டியலில் மதுரா மாவட்டத்தில் உள்ள மதுரா, பிருந்தாவன், கோவர்தன், நந்த்காவ்ன், பர்ஸானா, கோலம், மாஹாவன் மற்றும் பல்தேவ் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-செப்-202109:11:34 IST Report Abuse
குமார் மிக அற்புதமான முடிவு உபி அரசுக்கு அநேக நமஸ்காரங்களுடன் கூடிய வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Dharma - Madurai,இந்தியா
01-செப்-202108:06:36 IST Report Abuse
Dharma திருவள்ளுவர் புலால் உண்ணாமை, கள் உண்ணாமை யை வலியுறுத்தி பத்து, பத்து குறள் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
01-செப்-202112:40:33 IST Report Abuse
தமிழ்வேள்திருவள்ளுவர் பிறன்மனை விழையாமையை முன்னிறுத்தினார் ....அதை கடைபிடித்தால் திராவிட பவிஷு என்ன ஆவது ? நிறுவன தலைவர் ,அவருக்கு தலைவர் , நிரந்தர தலைவர் , வாரிசு தொண்டன் குண்டன் என்று எல்லா பயலுக்கும் ஏகப்பட்ட வீடுகள் ..கணக்கே கிடையாது ...இதை முன்னோடியான ஆட்சி என்று சொல்லிக்கொள்ளவில்லையா ? தமிழகம் உருப்படாது .11.0 ரிக்டர் அளவில் இரண்டு அல்லது மூன்று நிலநடுக்கங்கள் இன்றை தேவை - தமிழகத்துக்கு...
Rate this:
Cancel
01-செப்-202107:11:41 IST Report Abuse
ravi chandran அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X