பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
டோக்கியோ: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு (தமிழகத்தை சேர்ந்தவர்) வெள்ளிப்பதக்கம் வென்றார். ஷரத் குமாருக்கு வெண்கலம் கிடைத்தது.ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் ஆண்கள் உயரம் தாண்டுதலில் டி-42, டி-63 பிரிவு போட்டிகள் நடந்தன. மொத்தம் 9 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ரியோ
Paralympics, MariyappanThangavelu, Silver, HighJump, Sharad Kumar, Bronze, பாராலிம்பிக், மாரியப்பன் தங்கவேலு, வெள்ளி, உயரம் தாண்டுதல், ஷரத் குமார் வெண்கலம்

டோக்கியோ: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு (தமிழகத்தை சேர்ந்தவர்) வெள்ளிப்பதக்கம் வென்றார். ஷரத் குமாருக்கு வெண்கலம் கிடைத்தது.

ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் ஆண்கள் உயரம் தாண்டுதலில் டி-42, டி-63 பிரிவு போட்டிகள் நடந்தன. மொத்தம் 9 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், ஷரத் குமார், வருண் பட்டி என மூன்று வீரர்கள் களமிறங்கினர். இதில் அதிகபட்சம் 1.77 மீ., உயரம் மட்டும் தாண்டிய வருண், 7வது இடம் பிடித்து வெளியேறினார். 1.83 மீ., உயரம் தாண்டிய இந்தியாவின் ஷரத் குமார், மாரியப்பன், அமெரிக்காவின் சாம் கிரீவ் என மூன்று வீரர்களும் பதக்கங்களை உறுதி செய்ய, மற்ற வீரர்கள் வெளியேறினர்.


latest tamil newsஅடுத்து உயரம் 1.86 மீ., ஆக அதிகரிக்கப்பட்டது. மாரியப்பன், சாம் கிரீன் இதைத் தாண்டினர். மூன்று வாய்ப்பிலும் ஏமாற்றிய ஷரத் குமார் (1.83 மீ.,), மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார். அடுத்து உயரம் 1.88 மீ., ஆக அதிகரிக்கப்பட்டது. இதை மாரியப்பன் தாண்டவில்லை. மூன்றாவது வாய்ப்பில் சாம் கிரீவ் (1.88 மீ.,), சரியாக உயரத்தை தாண்டி, தங்கத்தை தட்டிச் சென்றார். மாரியப்பனுக்கு (1.86 மீ.,) வெள்ளிப்பதக்கம் தான் கிடைத்தது. கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், இம்முறை வெள்ளிப்பதக்கத்துடன் திரும்புகிறார். இதுவரை டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்கள் கைப்பற்றியது.


latest tamil news

மாரியப்பன், ஷரத்குமாருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

டோக்யோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் வெண்கலப் பதக்கம் வென்ற ஷரத்குமாருக்கும் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மாரியப்பன்.... குடும்பத்தினர் கிராமத்தினர் மகிழ்ச்சிடோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி யைச் சேர்ந்த மாரியப்பன் பங்கேற்றார் கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று இருந்ததால் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. பெரியவடகம்பட்டி யிலுள்ள அவரது வீட்டில் அவரது தாயார் சரோஜா,தம்பிகள் குமார், கோபி மற்றும் நண்பர்கள் தொலைக்காட்சியை நேரலையில் கண்டுகளித்தனர்.

தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கம் மாரியப்பன் வென்றார். இதனை நேரில் கண்ணுற்ற அவரது தாயார் சரோஜா மற்றும் உறவினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவருடைய சகோதரர்களும் நண்பர்களும் உற்சாக மிகுதியில் நடனமாடி மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பனின் தாய் சரோஜா தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்த்து இருந்ததாகவும் வெள்ளி வென்றதும் மகிழ்ச்சிதான் என்றும் நாட்டிற்காக மீண்டும் ஒரு முறை தன்னுடைய மகன் பதக்கம் வென்றது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றிருப்பது பெரியவடகம்பட்டி கிராம மக்களையும் அவரது நண்பர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ஒருவருக்கு ஒருவர் இனிப்பு பரிமாறிக் கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
31-ஆக-202123:17:39 IST Report Abuse
venkates மத்தியில் ஆளுகிறவர்கள் அரசியல் கலப்பு இல்லாமல் தகுதியானவர்களுக்கு செலவு செய்து ,தயார் செய்து அனுப்ப வேண்டும்,, ஏழைகள் பங்கு கொண்டு பதக்க குவியல் செய்து ,ஒயிலாக அரங்கில் பட்டொளி வீசி பறக்கும்,,,
Rate this:
Cancel
Thiagarajan - kuwait city,குவைத்
31-ஆக-202122:01:50 IST Report Abuse
Thiagarajan கிரேட் மாரியப்பன் வாழ்த்துகள்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
31-ஆக-202120:49:42 IST Report Abuse
Kasimani Baskaran 🇮🇳 மாரியப்பனுக்கும் ஷரத் குமாருக்கும் வாழ்த்துகள்🇮🇳
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X