சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவன் உடல் முழுவதும் சூடு: தந்தையின் கள்ளக்காதலி சித்ரவதை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வேலுார்: வேலூர் அருகே குடியாத்தத்தில் 8 வயது சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தையின் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு, 35. அவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சித்தார்த், 10, நித்திஷ், 8, ஆகிய மகன்கள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். தாயை இழந்த

வேலுார்: வேலூர் அருகே குடியாத்தத்தில் 8 வயது சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தையின் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு, 35. அவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சித்தார்த், 10, நித்திஷ், 8, ஆகிய மகன்கள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். தாயை இழந்த குழந்தைகள் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த வேணி என்ற பெண்ணுடன் சேட்டுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. வேணி அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சேட்டு உடன் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இதனிடையே முதல் மனைவியின் குழந்தைகளான சித்தார்த் மற்றும் நித்திஷ் ஆகியோரை வேணி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது
குறிப்பாக, நித்தீஷின் முதுகு, கை, கால்கள், பாதம், மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சூடு வைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனிடைய இன்று காலை நித்திஷ் அவருடைய வீட்டில் இருந்து தப்பித்து அருகில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு ஓடி வந்து நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் நித்திஷை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று புகார் கொடுத்தனர்.
உறவினர் நிஷாந்தி கொடுத்த புகாரின்பேரில், தந்தையின் கள்ளக்காதலி வேணியை கைது செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நித்திஷின் தந்தை வெளியூரில் வேலை செய்வதால் அவரை போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த நித்திஷை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுவனின் உடல் முழுவதும் தந்தையின் கள்ளக்காதலி சூடு வைத்து சித்ரவதை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X