கத்தாரில் தலிபான் துணை தலைவருடன் இந்திய தூதர் பேச்சு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
தோகா: தலிபான் துணை தலைவருடன், இந்தியா இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுதுமாக திரும்ப, இரண்டு வார கால அவகாசம் இருந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி வெளிநாடு தப்பினார். இந்நிலையில் கத்தார் நாட்டின் தோகா நகரில் தலிபான் அமைப்பின் துணைத்
 India officially talks toகத்தார் தலிபான், இந்திய தூதர்  பேச்சுTaliban in Doha

தோகா: தலிபான் துணை தலைவருடன், இந்தியா இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுதுமாக திரும்ப, இரண்டு வார கால அவகாசம் இருந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி வெளிநாடு தப்பினார்.

இந்நிலையில் கத்தார் நாட்டின் தோகா நகரில் தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் முகம்மது அப்பாஸ் ஸ்டேனக்சாய் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன், கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் தீபக் மித்தல் பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.


latest tamil news



இப்பேச்சுவார்த்தையின் போது ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட விஷயங்களை இந்திய தூதர் வலியுறுத்தியதாகவும், அதற்கு தலிபான் உத்தரவாதம் அளித்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஸ்டேனக்சாய் அளித்த பேட்டியில், ஆப்கனை பொறுத்தவரை இந்தியா ஒரு மிகவும் முக்கியமான நாடு. கலாசாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை அந்த நாட்டுடன் முன்பை போலவே தொடர விரும்புகிறோம் என்றார். இந்த சூழ்நிலையில் இன்று நடந்த முதல் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.


குழு அமைப்பு


ஆப்கான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்தார். இக்குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளார். இக்குழு ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
01-செப்-202116:25:37 IST Report Abuse
திரு.திருராம் பயங்கரமோ தீவிரமோ, ஒரு நாட்டின் அரசை அவர்கள் அமைக்கும் தருவாயில் நமது முதலீடுகள் உழைப்பு ஆகியவை அங்கு இருக்கும் சூழலில் பாக் சீனா போன்றில்லாமல் நாம் நமது நாட்டின் இறையாண்மைக்குத் தக்கவாறு குறைந்தபட்ச பேச்சுவார்த்தை செயல்திட்டங்கள் தாலிபானுடன் இருக்கவேண்டியது கட்டாயம், அமெரிக்கா ஐராேப்பா போன்றவையும் அதே போலதான் இருக்கும், அதை நாமும் பின்பற்றித்தான் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது,,
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
01-செப்-202105:05:16 IST Report Abuse
meenakshisundaram இவனுங்க போட்டிருக்கிற துணிங்க எத்தனையோ ஏழை மக்களுடையது .உருவிட்டு விடுங்க
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
31-ஆக-202122:53:23 IST Report Abuse
M  Ramachandran ஆபின்கானுக்கு நிச்சயம் இந்தியாவின் உதவி தேவைப்படும். பொருளாதார சந்தைக்கு இந்தியா ஒரு முக்கிய இடத்தில் உள்ளது. நாம் ஆப்பிக்கானிலிருந்து நிறைய இறக்குமதி செஇகிறோம். அதுபோனால் அவர்களுக்கு தேவையான கட்டுமான போர்ட்கள் நம்மிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கிறது. ஆகையினால் அவர்கள் நம்மைய நட்புநாடாக தான் பார்ப்பார்கள்.பாகிஸ்தானை மட்டும் நம்பி உபயோகமில்லை. யேனெனில் பாகிஸ்தான் சீனாவிடம் கையேந்தி நிற்கிறது. மேலும் சீனாவை அவர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள். சீன அங்குள்ள முஸ்லீம் மக்களை அடக்கி ஒடுக்கி உயிர்பலி வாங்கி வருகிறது.பாக்கித்தான் அடிமை நாடக மாறிவிட்டது தெரியும். அதன் பலனையும் அனுபவித்து வருகிறார்கள். மேலும் இந்தியா நட்புநாடாக தான் எல்லோரிடமும் பழகு கிறது. இதற்கு முரண்பாடாக பாகிஸ்தான் எப்போதும் நம்மிடம் விரோதம் பாராட்டி தேய செயல் கழிய செய்து வருகிறது. அதற்க்கு இஙகுள்ள குடும்ப பின்னணியுல்லா கூலிப்படைகள் உதவி வருவதும் உலகம் முழுவதும் தெரியும்.அதனால் தாலிபான்கள் இந்தியாவாய் நட்புநாடாக்க தன முயலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X