பொது செய்தி

இந்தியா

மீண்டும் பாய்ச்சலில் இந்திய பொருளாதாரம்: முதல் காலாண்டு ஜி.டி.பி., 20.1% அதிகரிப்பு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புது டில்லி: 2021 - 22 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதம் வளர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கோவிட் ஊரடங்கினால் மைனஸ் 24.4 சதவிகிதம் ஆக சரிந்திருந்தது.ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா கோவிட் சூழலுக்கு முன்பே மந்தமான வளர்ச்சியை கொண்டிருந்தது. 2020 மார்ச்

புது டில்லி: 2021 - 22 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதம் வளர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கோவிட் ஊரடங்கினால் மைனஸ் 24.4 சதவிகிதம் ஆக சரிந்திருந்தது.latest tamil news
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா கோவிட் சூழலுக்கு முன்பே மந்தமான வளர்ச்சியை கொண்டிருந்தது. 2020 மார்ச் மாதம் கோவிட் பரவத் தொடங்கியதும், முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டன. அவ்வாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மைனஸ் 24.4 சதவிகிதம் ஆக உள்நாட்டு உற்பத்தி சுருங்கியது. 2020 - 21 நிதியாண்டின் முடிவில் மைனஸ் 7.3 சதவிகிதமாக இருந்தது ஜி.டி.பி.,


latest tamil news
உற்பத்தியில் முன்னேற்றம்படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரளவு இயல்பு நிலை திரும்பியதால் உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்றம் காணப்பட்டது. முந்தைய ஜனவரி - மார்ச் காலாண்டில் 1.6 சதவிகித ஏற்றம் கண்டது. இந்நிலையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவல் படி 2021 - 22-ன் முதல் நிதியாண்டில் ஒரே பாய்ச்சலாக 20.1 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது ஜி.டி.பி., ஏப்ரலில் 2-ம் அலை ஏற்படாமல் இருந்திருந்ததால் இந்த வளர்ச்சி இன்னும் கூடியிருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். கடந்த ஆண்டில் கடும் வீழ்ச்சி கண்ட வர்த்தகம், ஓட்டல்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகள், இந்தாண்டு 68.3 சதவிகிதம் வளர்ந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
01-செப்-202110:52:18 IST Report Abuse
ponssasi மக்களிடம் வரியை சுமத்தி, விலைவாசியை உயர்த்தி, பொது சொத்துக்களை விற்று, உலக நாடுகளிடம் கடன் பெற்று சுமார் 20% மத்திய அரசின் வறுமை கோட்டின் கீழ் கிடந்த அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்திய அரசுக்கு 80% இந்திய பிரஜைகளின் சார்பில் நன்றி.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
01-செப்-202110:18:40 IST Report Abuse
elakkumanan பெட்ரோல் டீசல் விலை உயர்வு உயர்வு ன்னு கூவுவோர் களுக்கு ஒரு வேண்டுகோள்.............பெட்ரோல் மற்றும் டீசல் உபயோகம் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது..................விற்பனை குறையவில்லை...மாறாக, அதிகரிக்கிறது........ என்ன செய்யலாம் .......சொல்லுங்க.............உங்கள் புலம்பலின் பின்னால், மோடி எதிர்ப்பு முகமூடியும் பாக்கி மற்றும் சீன ஆதரவும் தெரிகிறது............. முடிந்தவரை, அந்த அடையாளத்தை வெளியே தெரியாமல், கமெண்ட் பதிவிடவும்.............ஆமா, ஸ்டெர்லிட் மூடிய பிறகு, இந்தியாவின் மாத , ஆண்டு , காப்பர் இறக்குமதி எவ்ளோ , அதுக்கு எவ்ளோ அதிக விலை நாம எல்லாரும் ( பாக்கிக்கும் சீனாவுக்கும் ) கொடுத்திருக்கோம்னு தெரியுமா? கேம்பிரிட்ஜ் படிப்பாளிக்கிட்ட (சிலை வைத்து கும்பிட்டு தமிழக கடனை குறைக்கும் அதீத அறிவாளியிடம் ) கேட்டுப்பாருங்க........காப்பர் விலையேற்றத்துக்கும் கூட, கூவலாம் நண்பா......... எரிபொருளாவது, மத்திய தரைக்கடல் நாடுகள், இந்தியாவிற்கு தேவைக்கு தருகின்றன..ஆனால், காப்பர், மிக அதிக விலை கொடுத்துவருகிறோம்.......... தம்பிகளா, வெளிநாட்டு எச்சை காசுக்கு கூவி, ஸ்டெர்லிட் மூடினோம்........ இப்போ, அதையெல்லாம் யாரும் கேக்கலையே.........பெட்ரோல், எப்படியோ அதேதான் காப்பரும்..ஆனால், தேவைக்கு கிடைப்பதில்லை.....இதெல்லாம் தெரியுமா வெளிநாட்டு காசுக்கு விலைபோன கூலிபான்களே.....சும்மா கூவுறானுவோ..... காப்பர் பயன்பாடு இல்லாத நாளே இல்லை...காப்பர் பயன்பாடு இல்லாத பொருளே இல்லை...உணவு பொருட்களில் மட்டுமே காப்பர் இல்லை....மற்ற எல்லா பொருட்களிலும் (அயன் பாக்ஸ் , கிரைண்டர், மிக்ஸி, கரண்ட் வயர், எல்லா கேபிள், எல்லா வண்டிகள் வாகனங்கள், ...............இப்படி காப்பர் இல்லாத பொருளே இல்லை..) போங்கடா நீங்களும் உங்கள் முதலை கண்ணீரும்.......மோடி யை எதிர்ப்பதாக நினைத்து தாய் நாட்டை சீரழிக்கும் கும்பல்..........
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
01-செப்-202109:55:19 IST Report Abuse
பாமரன் இந்த நியூஸில் குதூகலமாக எதுவும் இல்லை..🤔. உதாரணமாக... நான் 2019 ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் சராசரியாக 100 ரூபாய் சம்பாதிச்சேன்.. 2020 அதே காலாண்டில் ஆக்ஸிடென்ட் ஆனதால் வருமானம் குறைந்து 75 ரூபாய் சம்பாதிச்சேன்... இப்போ ஆக்சிடென்ட் இல்லை... எனர்ஜியை வளர்த்தாச்சு.. மேலும் உழைக்கும் தெம்பும் வந்தாச்சு... ஆனால் இந்த 2021 அதே காலாண்டில் என் வருமானம் 90 ரூபாய்... அதாவது சென்ற வருடத்தை கம்பேர் செய்தால் 20 சதவீதம் அதிகரித்துள்ளது... இதில் சந்தோஷப்படவோ குதூகலிக்கவோ செய்யனும்னா நானும் பகோடாவா இருந்திருக்கனும்... ஆனால் பாமரனா எப்போ பழைய நிலைக்கு வருவோம்னு கவலைப்படத்தான் முடியுது...🙄🙄
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X