சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'பாச்சா' பலிக்காது காங்கிரசாரே!

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
'பாச்சா' பலிக்காது காங்கிரசாரே! ஆர்.சுப்பிரமணி, புதுக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறையின் சொத்துக்களை, குத்தகை அடிப்படையில் பராமரிக்க தனியாருக்கு உரிமை வழங்க, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.'இத்திட்டத்தின் மூலம் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்று வருகிறது' என, காங்கிரஸ் பலத்த


'பாச்சா' பலிக்காது காங்கிரசாரே!





ஆர்.சுப்பிரமணி, புதுக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறையின் சொத்துக்களை, குத்தகை அடிப்படையில் பராமரிக்க தனியாருக்கு உரிமை வழங்க, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.'இத்திட்டத்தின் மூலம் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்று வருகிறது' என, காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நம் குடும்பத்தில் நிதி நிலைமை கவலைக்கிடமானால், வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து தேவையை பூர்த்தி செய்வோம். நிதி நிலைமை சீரடைந்ததும், நகைகளை வட்டியும் அசலும் கொடுத்து மீட்டுக் கொள்வோம்.அதே போலத் தான் அரசும், பொது சொத்துக்கள் சிலவற்றை தனியாருக்கு குத்தகைக்கு கொடுத்து, நிதி நிலைமை யை சீர் செய்து கொள்ளும். குத்தகை காலம் முடிந்ததும், அந்த சொத்து மீண்டும் அரசின் வசம் வந்து விடும்.இது வழக்கமான நடைமுறை தான். இதில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை!ஜனதா கட்சியை சேர்ந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த போது, நாட்டின் நிதி நெருக்கடி நிலைமையை சமாளிக்க, மத்திய அரசின் இருப்பில் இருந்த தங்கக் கட்டிகளை எடுத்து, உலக வங்கியில் கொடுத்து கடன் வாங்கினார்.கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும், மும்பை -- புனே விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில் 8,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.ஆக, அரசின் சொத்துக்களை ஈடாக வைத்து பணம் பெறுவது ஒன்றும் புதிதல்ல. இந்த வரலாறெல்லாம் தெரியாமல், 'மத்திய அரசின் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கிறார் பிரதமர் மோடி' என, எதிர்க்கட்சியினர் கூச்சல் போடுகின்றனர்.எதையாவது கூறி மக்கள் மனங்களில், மத்திய அரசின் மீது வெறுப்பை தோற்றுவிக்க, எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. அந்த, 'பாச்சா' பலிக்காது!


குற்றத்தில் ஜாதி பார்க்கலாமா?



சென்.ஜெயகுமார்,கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பா.ஜ., பொதுச் செயலராக இருந்த கே.டி.ராகவன் மீது பாலியல்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, 'வீடியோ' ஒன்று சமூக வலைதளங்களில்வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இவ்விஷயத்தில்தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது.வெற்றி, தோல்வியை பாராமல், பா.ஜ.,வில் நீண்ட காலமாக பொறுப்பில்உள்ளோருக்கு உயர் பதவிகள் கிடைத்து வருகின்றன. அவ்வகையில்தவறான மனிதருக்கு எதிர்காலத்தில் பதவி கிடைப்பது, இப்போதே தடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.தனி மனித ஒழுக்கம் என்பது அனைவருக்குமானது; இதில் பேதம் கிடையாது. ஆனால், ஒருவரின் தனிப்பட்ட அநாகரிக செயலுக்கு அவரை விமர்சிக்காமல், ஜாதியை முன்னிறுத்தி விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.தற்போதைய தி.மு.க., அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் இருவர், அக்கட்சி எம்.பி.,யாக இருப்பவர் ஆகியோரின் அநாகரிக வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.அப்போது அவர்களை எல்லாம் எந்த கட்சி என்று பார்த்தனரே தவிர, என்ன ஜாதி என குறிப்பிட்டு யாரும் விமர்சிக்கவில்லை.அதே போல, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவரின் மீது நடிகை புகார் அளித்திருந்தார்.

மற்றொரு முன்னாள் அமைச்சர் ஒருவரின் அநாகரிக, 'ஆடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதும் அவர்கள் என்ன ஜாதி என்று பார்க்கவில்லை.

தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - பா.ஜ., என ஒவ்வொரு கட்சியிலும் சலன புத்திஉள்ளோர் இருக்கத் தான் செய்கின்றனர்.ஆனால், சமீபத்தில் சிக்கிய பா.ஜ., பிரமுகரை மட்டும் ஜாதி ரீதியில் விமர்சிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்?இந்த திராவிட அரசியல் 'வியாதி'களுக்கு, தவறு செய்தவர் பா.ஜ., பிரமுகராக இருந்தால் மகிழ்ச்சி; அதிலும் அவர் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் இரட்டை மகிழ்ச்சி.
தங்களின் சுய லாபத்திற்காக ஜாதி உணர்வை துாண்டி அரசியல் செய்யும் இந்த போலி பகுத்தறிவுவாதிகளை எப்போது அடையாளம் காணப் போகிறோம்?


அனைவருக்கும் சமூக நீதி கிடைக்கணும்!



செ.சுவாமிநாதன், திருவானைக்கோவில், திருச்சி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: ஆகம விதிமுறைகளை பின்பற்றும் கோவில்களில் யாரை அர்ச்சகராக நியமிக்க வேண்டும், எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது எல்லாம், தமிழக அரசிற்கு வேண்டாத வேலை.அது குறித்து ஆன்மிகவாதிகள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. ஹிந்து கடவுள் இல்லை என்போர் மட்டும் தான், கோவிலில் அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என குரல் கொடுத்தனர்.அனைத்து ஜாதியின-ரையும் அர்ச்சகராக்குவோம் என்பதற்கு பதிலாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தால், அதை போற்றலாம்.மக்களுக்கு எது தேவையோ அதை நிறைவேற்றாமல் சர்ச்சையை கிளப்பி, அதில், 'குளிர் காய' ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது.அனைத்து ஜாதியினரிடமும் வறுமை உள்ளது. அன்றாட தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் எத்தனையோ உயர் வகுப்பினர் குடும்பங்கள் உள்ளன. அவர்களின் பசியை போக்க, சமூக நீதி பின்பற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுதி இருந்தும், இட ஒதுக்கீடு காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாமல் எத்தனையோ மாணவர்களின் கனவு கருகி போய் இருக்கிறது. அதை சீர் செய்ய, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.சமூக நீதியை சரியாக நடைமுறைப்படுத்துங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே!
l

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-செப்-202115:38:31 IST Report Abuse
D.Ambujavalli ஆயிரம் குற்றங்கள் நடக்கும். அவற்றுக்கு குற்றவாளிகளின் பெயர்கூட வெளிவராமல் கிசுகிசு பாணியில் செய்தி வரும் ஆனால் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் ஒன்று நிகழ்ந்துவிட்டால்.. கூக்குரலிட்டு, என்னவோ அந்த ஒரு ஜாதியே சகல அயோக்கியத்தனத்துக்கும் ஊற்றுக்கண் போல மிகைப்படுத்துவார்கள்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
01-செப்-202107:44:09 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN குடும்பமே கட்சித் தலைமை கட்சியில் தாங்கள் செல்வாக்கு இழக்காமல் இருப்பதற்காக ஏதேதோ செய்கிறார்கள் அந்த முயற்சிகள் காமெடியாக முடிந்து விடுகின்றன
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
01-செப்-202104:37:01 IST Report Abuse
NicoleThomson சென் ஜெயக்குமார் அவர்களே அருமையான கருத்து , மாபியா ஊடக வாதிகள் தான் இன்று இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளுகின்றனர் அவர்களை தமிழர்கள் இனம் கண்டு புறந்தள்ளினால் போதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X