சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மாவட்ட பதிவாளர்கள் மாற்றத்தில் மனக்குமுறல்!

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மாவட்ட பதிவாளர்கள் மாற்றத்தில் மனக்குமுறல்! லேசான துாறலுக்கு இடையே பெஞ்சுக்கு வந்த பெரியவர்களுக்கு, சூடான சுக்கு காபியை நாயர் தந்தார். அதை பருகியபடியே, ''போராட்டத்தை தடுத்து நிறுத்திட்டாங்க பா...'' என, மேட்டருக்கு முன்னுரை தந்தார் அன்வர்பாய்.''எந்த போராட்டத்தை சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''சென்னை கோயம்பேடுல இருக்கிற, தமிழக வீட்டுவசதி வாரிய

 டீ கடை பெஞ்ச்

மாவட்ட பதிவாளர்கள் மாற்றத்தில் மனக்குமுறல்!


லேசான துாறலுக்கு இடையே பெஞ்சுக்கு வந்த பெரியவர்களுக்கு, சூடான சுக்கு காபியை நாயர் தந்தார். அதை பருகியபடியே, ''போராட்டத்தை தடுத்து நிறுத்திட்டாங்க பா...'' என, மேட்டருக்கு முன்னுரை தந்தார் அன்வர்பாய்.

''எந்த போராட்டத்தை சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''சென்னை கோயம்பேடுல இருக்கிற, தமிழக வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகத்துல, நிலங்களை கையகப்படுத்தும் பிரிவுல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... போன ஆட்சியில, அ.தி.மு.க.,வினருக்கு சாதகமான அதிகாரியா வலம் வந்தாங்க பா...

''அந்த விசுவாசத்துக்கு பரிசா, துறையின் செயலர் பொறுப்பும் கூடுதலா கிடைச்சது... இப்ப, ஆட்சி மாறிட்ட சூழல்ல, மீண்டும், 'பவர்புல்'லா இருக்க முடிவு பண்ணியிருக்காங்க பா...

''இதுக்காக, மேல் அதிகாரிகளை மீறி செயல்படுறாங்க... தன் பணிகளை விட்டுட்டு, மற்ற அதிகாரிகள் பணிகள்லயும் தலையிட்டு குடைச்சல் தர்றாங்க பா...

''இதனால, வெறுத்து போன ஊழியர்கள், அதிகாரியை கண்டிச்சு, ஒரு நாள் கறுப்பு 'பேட்ஜ்' அணிந்து பணியாற்ற முடிவு பண்ணியிருக்காங்க... இது, ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு தெரியவர, 'அப்படி நடந்தா, ஆட்சிக்கு தான் கெட்ட பெயர்'னு எடுத்து சொல்லி, போராட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்காங்க பா...'' என்றார்
அன்வர்பாய்.பெஞ்சுக்கு வந்த நண்பரிடம், ''உங்க பொண்ணு ராஜலட்சுமி ஊருக்கு போயிட்டாங்களா வே...'' என விசாரித்த அண்ணாச்சி, ''பத்துக்கு ஒரு பங்கை தான் கட்டுதாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.

''யாரு, என்னன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார்குப்பண்ணா.

''சேலம் மாவட்டம், இடைப்பாடி வாரச்சந்தையை ஏலம் விட்டப்ப, யாரும் எடுக்க முன்வரலை... இதனால, நகராட்சி நிர்வாகமே வாடகை வசூலிக்கு வே...

''வாரா வாரம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல வசூல் பண்ணுற பில் கலெக்டர், நகராட்சி கருவூலகத்துக்கு வெறும் 1,500 ரூபாயை மட்டும் தான் கட்டுதாரு... மீதி பணத்தை, தன்
'பாக்கெட்'டுல போட்டுக்கிடுதாரு வே...

''இதை, நகராட்சி வருவாய் ஆய்வாளரும் கண்டுக்க மாட்டேங்காரு... பில் கலெக்டர் 10 வருஷத்துக்கும் மேலா, அங்கனயே வேலை பார்க்கிறதால, அவரை யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லுதாவ வே...'' என்றார்
அண்ணாச்சி.

''சம்பத், இந்த பேப்பரை அங்க வையும்...'' என்ற குப்பண்ணா, ''இடமாறுதல் போட்டும், பிரச்னை தீர்ந்தபாடில்லை ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''பத்திரப்பதிவு துறையில அடாவடியா செயல்படற சில மாவட்ட பதிவாளர்கள் மேல, சமீபத்துல நடவடிக்கை எடுத்தா... ஆனா, அது மயிலிறகால வருடி விடற மாதிரி, ஒப்புக்கு சப்பாணியாகவே இருந்திருக்கு ஓய்...

''இதனால, சமீபத்துல 26 மாவட்ட பதிவாளர்களை அதிரடியா இடம் மாத்தினா... இதுலயும் கூட, நாலு வருஷத்துக்கும் மேலா ஒரே இடத்துல வசூல் வேட்டை நடத்திண்டு இருக்கற சில பதிவாளர்கள் சாமர்த்தியமா தப்பிச்சுட்டா... ஆனா, ஒரே இடத்துல ஒரு வருஷம் கூட முடியாதவாளை கூட மாத்திட்டான்னு பதிவு துறையில குமுறல்கள் கேக்கறது ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
01-செப்-202123:42:16 IST Report Abuse
Anantharaman Srinivasan Dear Ambujavalli எப்ப சிவன் தலையில் பாம்புகள் இருந்தது.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-செப்-202115:31:46 IST Report Abuse
D.Ambujavalli எல்லாம் சிவன் தலைப் பாம்புகளாக இருந்தால் எந்த மாற்றாலும் டச் பண்ணாது ஓரிரு ஏமாளிகளை மட்டும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூட மாறுவார்கள் இதுதான் அரசு துறைகளின் லட்சணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X