பொது செய்தி

தமிழ்நாடு

எளிமையாக நடந்த கோகுலாஷ்டமி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஈரோடு: கொரோனா கட்டுப்பாடுகளால், கிருஷ்ண ஜெயந்தி விழா, வீடுகளில் எளிமையாக கொண்டாடப்பட்டது.மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள், கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில், தங்கள் வீட்டுக் குழந்தைகளை கிருஷ்ணராகவே பாவித்து, கிருஷ்ணன், ராதா வேடமணிந்து பெற்றோர் அழகு பார்ப்பர். கோவில்கள், வீடுகளில் அரிசி மாவினால் குழந்தை காலடி தடத்தை பதித்து

ஈரோடு: கொரோனா கட்டுப்பாடுகளால், கிருஷ்ண ஜெயந்தி விழா, வீடுகளில் எளிமையாக கொண்டாடப்பட்டது.


மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள், கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில், தங்கள் வீட்டுக் குழந்தைகளை கிருஷ்ணராகவே பாவித்து, கிருஷ்ணன், ராதா வேடமணிந்து பெற்றோர் அழகு பார்ப்பர். கோவில்கள், வீடுகளில் அரிசி மாவினால் குழந்தை காலடி தடத்தை பதித்து வழிபாடும் செய்வர். கிருஷ்ண ஜெயந்தி தினமான நேற்று, கொரோனா தொற்றால் சில வீடுகளிலும், சிறு கோவில்களிலும் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், டீச்சர்ஸ் காலனி, காரைவாய்க்கால், அக்ரஹார வீதி உள்ளிட்ட பல பகுதிகளில், வீட்டில் மாவிலை தோரணம் கட்டி, வாசல் தெளித்து, வாசல்படி முதல், பூஜை அறை வரை கிருஷ்ணரின் காலடி தடம் பதித்து மக்கள் வழிபட்டனர். கள்ளுக்கடை மேடு ஆஞ்சநேயர் கோவிலில், உற்சவ ராதை, கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தால் அருள் பாலித்தார். கே.எஸ்.நகர் ரங்காபவனம் குருவாயூர் கிருஷ்ணன் கோவில், ராத்திரி சத்திரம் பாமா, ருக்குமணி ராதா கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், எளிமையாக வழிபாடு நடந்தது.


*அந்தியூரில், பேட்டை பெருமாள் கோவில், சுற்று வட்டார பகுதிகளில், குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து, மக்கள் கோகுலாஷ்டமி கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X