கட்டட பணியில் ரூ.10 லட்சம் மோசடி: தந்தை, மகன் மீது கான்ட்ராக்டர் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட பணியில் ரூ.10 லட்சம் மோசடி: தந்தை, மகன் மீது கான்ட்ராக்டர் புகார்

Added : ஆக 31, 2021
Share
ஈரோடு: அவல்பூந்துறை, வெள்ளப்பெத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கட்டட பணிகளை ஆர்டர் எடுத்து, ஆட்களை வைத்து செய்கிறேன். ஈரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன், பொன்னம்பலம் என்னை அணுகினர். ஒரு வீட்டு வரைபடத்தை கொடுத்து, கட்டி தர கேட்டனர். முன் பணமாக, 50 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டேன். இந்நிலையில்

ஈரோடு: அவல்பூந்துறை, வெள்ளப்பெத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கட்டட பணிகளை ஆர்டர் எடுத்து, ஆட்களை வைத்து செய்கிறேன். ஈரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன், பொன்னம்பலம் என்னை அணுகினர். ஒரு வீட்டு வரைபடத்தை கொடுத்து, கட்டி தர கேட்டனர். முன் பணமாக, 50 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டேன். இந்நிலையில் ராதாகிருஷ்ணன், அவரது மகன் சீனிவாசன், 25 தவணைகளாக, எனது வங்கி கணக்கில், 32 லட்சத்து, 22 ஆயிரம் ரூபாய் செலுத்தினர். அவர்கள் கொடுத்த வரைபடத்தை விட, 518 சதுர அடி அதிகமாக உள்ளதை தெரிவித்தேன். எனக்கு தர வேண்டிய நிலுவை தொகை, 10 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாயை கொடுத்து, கணக்கு முடிப்பதாக தெரிவித்தனர். ஆனால், வேறு ஒரு நபரை வைத்து மீதி பணியை தொடங்கியுள்ளனர். பாக்கி தொகையை கேட்டு வீட்டுக்கு சென்று கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தனர். உரிய விசாரணை நடத்தி, பாக்கி தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X