பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டுள்ள யானைகள்: பவானிசாகர் கிராம மக்கள் அச்சம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அணை பூங்கா அருகே, குடியிருப்பு பகுதியில், யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பவானிசாகர் வனப்பகுதியில் வசிக்கும் யானைகள், இரவில் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி, பவானிசாகர் அணை பகுதிக்கு வருவது வழக்கம். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த ஐந்து யானைகள் பூங்கா அருகே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரும்பு கேட்டை

பவானிசாகர்: பவானிசாகர் அணை பூங்கா அருகே, குடியிருப்பு பகுதியில், யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பவானிசாகர் வனப்பகுதியில் வசிக்கும் யானைகள், இரவில் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி, பவானிசாகர் அணை பகுதிக்கு வருவது வழக்கம். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த ஐந்து யானைகள் பூங்கா அருகே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரும்பு கேட்டை திறந்து வெளியேறின. புங்கார் கிராமம் வழியாக பவானி ஆற்றை கடந்து, பவானிசாகர் அணை பூங்கா எதிர்ப்புறம் முட்புதர் காட்டில் முகாமிட்டன. இதனால் அண்ணாநகர் பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். யானைகள் முகாமிட்டுள்ள முட்புதர் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்க்க செல்ல வேண்டாம் என மக்களிடம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X