பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, மதிப்பாய்வு குழு கூட்டம்: அமைச்சர் சாமிநாதன், எம்.பி.,க்கள் பங்கேற்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஈரோடு: மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் மதிப்பாய்வு குழு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி.,க்கள் சுப்பராயன், கணேச மூர்த்தி, எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, கலெக்டர் கிருஷ்ணனுன்ணி கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் சாமிநாதன், எம்.பி.,

ஈரோடு: மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் மதிப்பாய்வு குழு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி.,க்கள் சுப்பராயன், கணேச மூர்த்தி, எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, கலெக்டர் கிருஷ்ணனுன்ணி கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் சாமிநாதன், எம்.பி., கணேசமூர்த்தி பேசியதாவது: மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் செயல்பாடு, இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், தனிநபர் இல்ல கழிப்பறை பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய, ஆய்வு அட்டை மற்றும் ஆய்வு பதிவேடு பராமரிக்கப்படுகிறது. ஆய்வு அலுவலர்கள் கழிப்பறைகளை பார்வையிட்டு பதிவு செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்ல், 2016 முதல் தற்போது வரை, 4,429 குடியிருப்புகள், 7.52 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தில், ஈரோடு மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 319 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தில், 380 கிராமப்புற இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 933 கோடி ரூபாய் மதிப்பில், 42 திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 16 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 15 பணிகள் நடந்து வருகின்றன. கோபி, பவானி, சத்தி, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிகளில், பயோ மைனிங் முறையில் குப்பை பிரித்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில், அனைவருக்கு வீடு கட்டும் திட்டத்தில், 704 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தேசிய வேளாண் சந்தை திட்டத்தில், ஈரோடு விற்பனை குழுவில் அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஒருங்குமுறை விற்பனைக்கூடங்களில் தேசிய வேளாண் சந்தை தொடங்கப்பட்டு மஞ்சள், எள், நிலக்கடலை, நெல், மக்காச்சோளம், தேங்காய் உள்ளிட்ட விளை பொருட்கள் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா திட்டத்தில், கிராமப்புற பகுதிகளில், 15.28 கோடி செலவில் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X