பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித்துறை பணியாளர் விரிவுபட்ட நிர்வாக கூட்டம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க, விரிவுபட்ட நிர்வாகக்குழு கூட்டம், ஈரோட்டில் நடந்தது. தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன், சங்க மாவட்ட செயலாளர் மணியன், மாவட்ட பொருளாளர் ரவி, சங்க வட்டார பொறுப்பாளர்கள் பவானிசாகர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் சுய உதவிக்குழு,

ஈரோடு: ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க, விரிவுபட்ட நிர்வாகக்குழு கூட்டம், ஈரோட்டில் நடந்தது. தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன், சங்க மாவட்ட செயலாளர் மணியன், மாவட்ட பொருளாளர் ரவி, சங்க வட்டார பொறுப்பாளர்கள் பவானிசாகர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் சுய உதவிக்குழு, கான்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர் உள்ளிட்ட அனைவரையும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி பணியாளர்களாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கம், நகர விரிவாக்கம் அடிப்படையில் தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். கொரோனா காலப்பணிக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை, உள்ளாட்சி தொழிலாளர் அனைவருக்கும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தொழில் கருவிகளை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்களிடம் வரும், 15ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் தொடரும். செப்., 13, 14ல் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது, செப்., 22ல் ஈரோட்டில் பெருந்திரளாக சென்று கலெக்டரிடம் மனு, கையெழுத்து படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X