பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணையில் உபரி நீர் திறப்பு: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 102 அடியை தொட்டது. அணை மொத்த உயரம், 105 அடி. ஆனாலும், அணை பாதுகாப்பு விதிமுறைப்படி, 102 அடிக்கே தண்ணீர் தேக்க முடியும். இதனால் அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், அதாவது, 2,800 கன அடி தண்ணீர்,

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 102 அடியை தொட்டது. அணை மொத்த உயரம், 105 அடி. ஆனாலும், அணை பாதுகாப்பு விதிமுறைப்படி, 102 அடிக்கே தண்ணீர் தேக்க முடியும். இதனால் அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், அதாவது, 2,800 கன அடி தண்ணீர், ஆற்று மதகு வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அக்டோபர் மாத இறுதி வரை, 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க வேண்டும். அதுவரை அணைக்கு வரும் நீர் முழுவதும், பவானி ஆற்றில் வெளியேற்றப்படும். உபரி நீர் திறப்பால், பவானி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள், சிறுவர்கள், ஆற்றில் குளிப்பதோ, மீன் பிடிக்கவோ, போட்டோ எடுக்கவோ கூடாது, எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X