சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் டிரைவரை கொன்ற தோட்ட உரிமையாளர் கைது: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தாளவாடி: தாளவாடி மலையில், டிராக்டர் டிரைவரை கொலை செய்த, தோட்டத்து உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.தாளவாடி மலை தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா, 40; டிராக்டர் டிரைவர். கடந்த, 28ம் தேதி காலை, முதியனூர் அருகே தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். ஆசனூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த உடற்கூறு

தாளவாடி: தாளவாடி மலையில், டிராக்டர் டிரைவரை கொலை செய்த, தோட்டத்து உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.


தாளவாடி மலை தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா, 40; டிராக்டர் டிரைவர். கடந்த, 28ம் தேதி காலை, முதியனூர் அருகே தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். ஆசனூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த உடற்கூறு பரிசோதனையில், தலையின் பின்புறம் அடிபட்டு இறந்ததாக அறிக்கை வந்தது. இதையடுத்து சத்தி டி.எஸ்.பி., ஜெயபாலன், தாளவாடி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். தாளவாடி, ராமாபுரத்தை சேர்ந்த தோட்ட உரிமையாளர் முத்து முருகேஷ், 47; இவரிடம்தான் சித்தப்பா வேலை செய்தார். அவரிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர். சித்தப்பாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: கடந்த, ??ம் தேதி மதியம், வேலை செய்த கூலி பணத்தை, சித்தப்பா கேட்டார். அப்போது போதையில் இருந்ததால், மனைவி அல்லது குடும்பத்தாரை அழைத்து வந்தால் பணம் தருவதாக கூறினேன். அப்போது திரும்பிச் சென்ற அவர் நள்ளிரவில் மீண்டும் தோட்டத்துக்கு வந்தார். காவலில் இருந்த என்னிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது தள்ளி விட்டதில், கல் மீது விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்து விட்டார். பிணத்தை டிராக்டரில் ஏற்றி முதியனூர் அருகே சாலையோரத்தில் வீசி விட்டு வந்து விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். முத்து முருகேசனை கைது செய்த போலீசார், சத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X