பொது செய்தி

தமிழ்நாடு

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவில்களில் பூஜை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது. கிருஷ்ணன் தங்ககவச சாத்துப்படியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.* சேலம், அம்மாபேட்டை குருவாயூரப்பன் கோவிலில் தொட்டிலில் கிருஷ்ணரை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.* சேலம், எருமாபாளையம் ராமானுஜர் மணிமண்டபத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது. கிருஷ்ணன் தங்ககவச சாத்துப்படியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* சேலம், அம்மாபேட்டை குருவாயூரப்பன் கோவிலில் தொட்டிலில் கிருஷ்ணரை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.


* சேலம், எருமாபாளையம் ராமானுஜர் மணிமண்டபத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருமஞ்சனம், பூஜைகள் நடந்தன.


* சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவில், இரண்டாவது அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


* சேலம், கிச்சிப்பாளையம் பாரதிய சேனா சமிதி திருமண மண்டபத்தில், இந்து மக்கள் சார்பில் நடந்த கோகுலாஷ்டமி விழாவில், வீணை, பரதநாட்டியம், சொற்பொழிவு, ராதை கண்ணனுக்கு அபி?ஷக ஆராதனை நடந்தது.


* சங்ககிரி அருகே, நாட்டாம்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கண்ணபிரானுக்கு, யாதவா சங்கம் சார்பில் புனித நீர் எடுத்து வந்து பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் சப்பரத்தில் வைத்து சுற்றி வந்தனர்.


* பனமரத்துப்பட்டி அருகே, நத்தமேடு சென்னகேசவ சென்றாய பெருமாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சீடை, அதிரசம், இனிப்புகள் வைத்து, தீபாராதனை காட்டப்பட்டது. அதே போல், கோம்பைக்காடு சத்தியநாராயணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X