பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் வந்த, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சைக்கிள் பேரணியை, போலீசார், பொதுமக்கள் வரவேற்பு அளித்ததோடு, உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 15 பேர் கன்னியாகுமரியில் கடந்த, 22ல் துவங்கிய சைக்கிள் பேரணியை, 2,250 கி.மீ., பயணத்துக்கு பின் அக்.,2ல் டில்லி ராஜ்கோட்டில் நிறைவடைகிறது. உதவி கமாண்டர்

சேலம்: சேலம் வந்த, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சைக்கிள் பேரணியை, போலீசார், பொதுமக்கள் வரவேற்பு அளித்ததோடு, உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.


நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 15 பேர் கன்னியாகுமரியில் கடந்த, 22ல் துவங்கிய சைக்கிள் பேரணியை, 2,250 கி.மீ., பயணத்துக்கு பின் அக்.,2ல் டில்லி ராஜ்கோட்டில் நிறைவடைகிறது. உதவி கமாண்டர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று முன்தினம் மாலை, சேலம் வந்த அவர்களுக்கு மாவட்ட எல்லையில் போலீசார், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். சேலத்தில் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர்கள், நேற்று காலை தர்மபுரி புறப்பட்டு சென்றனர். அவர்களை சேலம் மாநகர போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, தெற்கு சரக சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழியனுப்பி வைத்தனர். சைக்கிள் பேரணி சென்ற இடங்களில், பொதுமக்கள் கையசைத்து உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் அவர்கள், அங்கிருந்து ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் வழியாக டில்லி செல்வர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X