பொது செய்தி

தமிழ்நாடு

ராமானுஜர் மணி மண்டபத்தில் கோகுலாஷ்டமி விழா போட்டி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வீரபாண்டி: சேலம், எருமாபாளையம் ஏரிக்கரையில் அமைந்துள்ள ராமானுஜர் மணிமண்டபத்தில், கிருஷ்ணர் அவதார திருநாளான கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கான 'கண்ணன் ராதை' அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டன. தலையில் மயில் கிரீடம், கையில் புல்லாங்குழல், பலவிதமான நகைகள் அணிந்து, சின்னஞ்சிறு பாலகர்கள் குட்டி கண்ணன்களாக வந்திருந்தனர். சிறுமிகளுக்கு

வீரபாண்டி: சேலம், எருமாபாளையம் ஏரிக்கரையில் அமைந்துள்ள ராமானுஜர் மணிமண்டபத்தில், கிருஷ்ணர் அவதார திருநாளான கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கான 'கண்ணன் ராதை' அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டன. தலையில் மயில் கிரீடம், கையில் புல்லாங்குழல், பலவிதமான நகைகள் அணிந்து, சின்னஞ்சிறு பாலகர்கள் குட்டி கண்ணன்களாக வந்திருந்தனர். சிறுமிகளுக்கு வண்ண வண்ண உடைகள் அணிவித்து, கையில் வெண்ணெய் குடங்களுடன் ராதைகளாக ஒய்யார நடை பயின்று வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இதே போல் கண்ணன், ராதை ஓவிய போட்டி நடத்தப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. இதே போல் சேலம் சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், பட்டைகோவில் அருகே வடகலை சம்பிரதாய பஜனை மடத்தில், குழந்தைகளை 'கிருஷ்ணர் ராதை' வேடமிட்டு அழைத்து வந்திருந்தனர். கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் பஜனை பாடல்களுடன் கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X