பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகள் வருகையால் களைகட்டிய ஆணைவாரி நீர் வீழ்ச்சி, முட்டல் ஏரி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், ஆணைவாரி நீர் வீழ்ச்சி, முட்டல் ஏரி களைகட்டியுள்ளது.ஆத்தூர் அருகே, ஆணைவாரி நீர் வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி 'சூழல் சுற்றுலா மையம்' கடந்த, 25 முதல் பயணிகள் வருவதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது. கடந்த மூன்று நாட்களாக, விடுமுறை என்பதால் முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முட்டல்

ஆத்தூர்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், ஆணைவாரி நீர் வீழ்ச்சி, முட்டல் ஏரி களைகட்டியுள்ளது.


ஆத்தூர் அருகே, ஆணைவாரி நீர் வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி 'சூழல் சுற்றுலா மையம்' கடந்த, 25 முதல் பயணிகள் வருவதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது. கடந்த மூன்று நாட்களாக, விடுமுறை என்பதால் முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முட்டல் ஏரியில் மோட்டார் படகு மற்றும் பரிசலில் செல்வதற்கு ஆர்வம் காட்டினர். தவிர பூங்காவில் சிறுவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் விளையாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து, சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு சாலை, பாலம் புதிதாக அமைத்துள்ளதால் எளிதாக சென்று வரமுடிகிறது. நீர் வீழ்ச்சியில் இயற்கையான சூழலில் மூலிகை தண்ணீராக வருவதால் மகிழ்ச்சி. தண்ணீர் கொட்டும் இடத்தில் உள்ள கைப்பிடிகளை சரிசெய்ய வேண்டும்' என்றனர். ஆத்தூர் வனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில், ''கடந்த, 25ல், சூழல் சுற்றுலா மையம் திறந்தபோது, 70 பேர் வந்தனர். அடுத்தடுத்த நாளில், 300 முதல், 500 பேர் வரை வந்தனர். 29ல், 1,256 பேரும், இன்று (நேற்று), 500 பேரும் வந்தனர். இதன் மூலம், 70 ஆயிரம் ரூபாய் வனத்துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X