சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை அருகே குடும்ப தகராறில் கழுத்தறுத்து கணவர் கொலை : மனைவியிடம் விசாரணை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சிவகங்கை:சிவகங்கை அருகே வேலைக்கு போகாமல் அடிக்கடி குடித்து தகராறில் ஈடுபட்ட கணவர் ராஜாங்கத்தை 45, அவரது மனைவி விஜயராணி 40, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மானாமதுரை அருகே மிளகனுார் கருக்கண் மகன் ராஜாங்கம் 45. இவருக்கும் சிவகங்கை அருகே சுந்தரநடப்பு விஜயராணிக்கும் 40, கடந்த 20 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பி.எஸ்சி., படிக்கும் அமேகா 19, அபிராமி 18, பிளஸ் 2

சிவகங்கை:சிவகங்கை அருகே வேலைக்கு போகாமல் அடிக்கடி குடித்து தகராறில் ஈடுபட்ட கணவர் ராஜாங்கத்தை 45, அவரது மனைவி விஜயராணி 40, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
மானாமதுரை அருகே மிளகனுார் கருக்கண் மகன் ராஜாங்கம் 45. இவருக்கும் சிவகங்கை அருகே சுந்தரநடப்பு விஜயராணிக்கும் 40, கடந்த 20 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பி.எஸ்சி., படிக்கும் அமேகா 19, அபிராமி 18, பிளஸ் 2 படிக்கும் வாசுகி 17, பத்தாம் வகுப்பு படிக்கும் கரண்குமார் 15, ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். ராஜாங்கம் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி வந்து வீட்டில் தகராறில் ஈடுபடுவார். குழந்தைகளை படிக்க வைக்க விஜயராணி சிவகங்கை அரசு மருத்துவமனையில் மாதம் ரூ.7000 சம்பளத்திற்கு துாய்மை பணியாளராக உள்ளார்.

* கழுத்தறுத்து கொலை :
இரவு 7:30 மணிக்கு வழக்கம் போல் மது அருந்தி வந்த ராஜாங்கத்திற்கும், அவரது மனைவிக்கும் சண்டை நடந்துள்ளது. குழந்தைகள் மூவரும் வீட்டிற்குள் டி.வி., பார்த்தபோது, வாசலில் வைத்து கணவரை கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். சம்பவ இடத்தில் சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார், டி.எஸ்.பி., பால்பாண்டி விசாரித்தனர். சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, எஸ்.ஐ., ராஜ்கமல் ஆகியோர் விஜயராணியிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X