பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ டிரைவர்களிடம் தி.மு.க., நிர்வாகிகள் வசூல்; தலைமைக்கு புகார்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே, தொ.மு.ச., சார்பில் மற்றொரு ஸ்டாண்ட் ஏற்படாமல் இருக்க, தி.மு.க.,வினர் வசூல் வேட்டை நடத்துவதாக, தலைமைக்கு ஆட்டோ டிரைவர்கள் புகார் மனு அனுப்பினர்.சேலம் சீலநாயக்கன்பட்டி ஆட்டோ ஸ்டாண்ட் சங்க செயலாளர் சீனிவாசன், தொ.மு.ச.,தலைவர் சண்முகத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு விபரம்: சீலநாயக்கன்பட்டி பைபாசில், 45 பேர்

சேலம்: சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே, தொ.மு.ச., சார்பில் மற்றொரு ஸ்டாண்ட் ஏற்படாமல் இருக்க, தி.மு.க.,வினர் வசூல் வேட்டை நடத்துவதாக, தலைமைக்கு ஆட்டோ டிரைவர்கள் புகார் மனு அனுப்பினர்.


சேலம் சீலநாயக்கன்பட்டி ஆட்டோ ஸ்டாண்ட் சங்க செயலாளர் சீனிவாசன், தொ.மு.ச.,தலைவர் சண்முகத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு விபரம்: சீலநாயக்கன்பட்டி பைபாசில், 45 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 2018ல் இந்த ஸ்டாண்டை சேர்ந்த, 41 பேர் தொ.மு.ச.,வில் இணைந்துள்ளனர். அது மட்டுமின்றி, தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த சிலர் சீலநாயக்கன்பட்டி மயானம் செல்லும் பிரிவு சாலையில், தொ.மு.ச., தொழிற்சங்க பலகையை வைத்து, அதில் ஸ்டாண்டையும் ஏற்படுத்தினர். இது குறித்து மாவட்ட செயலாளர் ராஜேந்திரனிடம் புகாரளித்தோம். அவர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் பிரச்னையை தீர்த்து வைப்பார் என தெரிவித்தார். அவரை சந்தித்ததில், இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார். இந்நிலையில் தொ.மு.ச., என கூறிக் கொள்பவர்கள் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் கலந்து கொண்ட நிலையில், முடிவு செய்ய இரண்டு வார அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தி.மு.க., நிர்வாகிகள் எங்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஒரு ஆட்டோவுக்கு, 6,000 ரூபாய் கொடுத்தால், புதிய ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்றுகிறோம் என்றனர். தி.மு.க.,வினரிடமே தொ.மு.ச., நிர்வாகிகள் பணம் கேட்டு மிரட்டுவது வேதனை அளிக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, புதிய ஸ்øடாண்டுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X