பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் வகுப்புகள் துவக்கம்: தயார் நிலையில் அரசு பள்ளிகள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சேலம்: நாளை முதல் வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், அரசு பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, நீண்ட இடைவெளிக்கு பின், நாளை முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 9 முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் நடத்த, வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, பள்ளி வளாகத்தில் உள்ள

சேலம்: நாளை முதல் வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், அரசு பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, நீண்ட இடைவெளிக்கு பின், நாளை முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 9 முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் நடத்த, வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, பள்ளி வளாகத்தில் உள்ள புதர்கள், குப்பை அகற்றம், மராமத்து பணிகள், தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்டவை, கடந்த வாரத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வகுப்பறையிலும், அமர வைக்க வேண்டிய மாணவர்கள் பட்டியலை, தனித்தனியே தயாரித்து, வகுப்பறை வாசலில் ஒட்டும் பணியை நேற்று ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X