பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன்களில் விழிப்புணர்வு பிளக்ஸ்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சேலம்: வங்கி பணபரிவர்த்தனை, ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க, ரகசிய எண்ணை கொடுக்க வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி, சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் விழிப்புணர்வு பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், ஆசை வார்த்தைகளை கூறி வங்கி பண பரிவர்த்தனைக்கான ரகசிய எண், கடன் அட்டை ரகசிய எண், ஏ.டி.எம்., டெபிட் கார்டு ரகசிய எண், ஆதார் கார்டு எண்களை

சேலம்: வங்கி பணபரிவர்த்தனை, ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க, ரகசிய எண்ணை கொடுக்க வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி, சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் விழிப்புணர்வு பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், ஆசை வார்த்தைகளை கூறி வங்கி பண பரிவர்த்தனைக்கான ரகசிய எண், கடன் அட்டை ரகசிய எண், ஏ.டி.எம்., டெபிட் கார்டு ரகசிய எண், ஆதார் கார்டு எண்களை பெற்று மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்த மோசடிகளை தடுக்க, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த போலீஸ் கமிஷனர் நஜ்முல் ?ஹாதா உத்தரவிட்டார். இதையடுத்து மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ஓ.டி.பி., மூலமாகவோ, வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டதா? பதட்டம் வேண்டாம். உடனடியாக மோசடி நடந்த, 24 மணி நேரத்துக்குள், 155260 எண்ணுக்கு அழையுங்கள். சைபர் குற்றங்கள் சம்பந்தமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வராமலேயே, www.cybercrime.gov.in என்ற வலைதளத்திலும் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X