சம்பவம் செய்தி

தமிழ்நாடு

17 வயது சிறுமிக்கு திருமணம்: கணவர் உள்பட ஐவர் கைது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சிறுமிக்கு திருமணம் செய்து வைத்து கொடுமை செய்வதாக அளித்த புகார்படி, கணவர், பெற்றோர் உள்பட ஆறு பேர் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, ஐந்து பேரை கைது செய்தனர்.ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையம், பாலாண்டியூரை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்குமார், 27, விவசாயி. இவருக்கு கடந்தாண்டில், வாழப்பாடியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு படித்து வந்த, 17 வயது சிறுமியை திருமணம்

ஆத்தூர்: சிறுமிக்கு திருமணம் செய்து வைத்து கொடுமை செய்வதாக அளித்த புகார்படி, கணவர், பெற்றோர் உள்பட ஆறு பேர் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, ஐந்து பேரை கைது செய்தனர்.


ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையம், பாலாண்டியூரை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்குமார், 27, விவசாயி. இவருக்கு கடந்தாண்டில், வாழப்பாடியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு படித்து வந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த மாதம், சேலம் கலெக்டர் கார்மேகத்திடம் கட்டாய திருமணம் செய்து கணவர், பெற்றோர் உள்ளிட்டோர் கொடுமை செய்து வருவதாக சிறுமி புகாரளித்தார். கலெக்டர் உத்தரவுபடி, சேலம் குழந்தைகள் நல குழும அலுவலர்கள் விசாரணை நடத்தியதில், சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. சிறுமியை திருமணம் செய்த செந்தில்குமார், 27, மாமனார் பெருமாள், 72, மாமியார் சித்தாயி, 59, மாணவியின் பெற்றோர், உறவினர் என ஆறு பேர் மீது, ஏத்தாப்பூர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர். இதில் கணவர், இருவீட்டு பெற்றோர் என, ஐந்து பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X