பொது செய்தி

தமிழ்நாடு

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பூஜை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
அரூர்: அரூர், மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள வாணீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியான நேற்று, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. அதேபோல், சந்தைமேட்டில் காளியம்மன் கோவிலிலுள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.* அதியமான்கோட்டையில் தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியன்று,

அரூர்: அரூர், மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள வாணீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியான நேற்று, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. அதேபோல், சந்தைமேட்டில் காளியம்மன் கோவிலிலுள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

* அதியமான்கோட்டையில் தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடகா மாநிலத்திலிருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா தொற்றை தடுக்க, தமிழக அரசு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனால், இக்கோவிலுக்கு வர பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், சுவாமியை வழிபட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒருசில பக்தர்கள் கோவிலுக்கு முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், சாம்பல் பூசணியில் தீபமேற்றி கோவில் முன் நின்று வழிபட்டுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X