பொது செய்தி

தமிழ்நாடு

'விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., போலி வேஷம்'

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தர்மபுரி: ''விவசாயிகளுக்கு ஆதரவு போல், தி.மு.க., போலி வேஷம் போட்டு வருகிறது,'' என, அ.தி.மு.க., மாஜி அமைச்சர் அன்பழகன் கூறினார்.இதுகுறித்து அவர், தர்மபுரியில் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டத்தின் மீது, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீர்ப்புக்கு பின் இதுகுறித்து முடிவு எடுக்க கருத்து தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியில் சட்டங்களில் உள்ள சாதக, பாதகங்களை

தர்மபுரி: ''விவசாயிகளுக்கு ஆதரவு போல், தி.மு.க., போலி வேஷம் போட்டு வருகிறது,'' என, அ.தி.மு.க., மாஜி அமைச்சர் அன்பழகன் கூறினார்.


இதுகுறித்து அவர், தர்மபுரியில் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டத்தின் மீது, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீர்ப்புக்கு பின் இதுகுறித்து முடிவு எடுக்க கருத்து தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியில் சட்டங்களில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து திருத்தம் செய்ய வேண்டியவற்றை திருத்தம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டது. இதை அறிந்து திருத்தம் கொண்டு வர வழிவகை செய்ய அ.தி.மு.க., கோரிக்கை வைத்தது. தி.மு.க., அரசு ஏற்றுக் கொள்ளாததால் அ.தி.மு.க., சட்டசபையில் வெளிநடப்பு செய்தது. இதற்கு தமிழக மக்களுக்கு, அ.தி.மு.க., துரோகம் செய்து விட்டதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார். ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை கொண்டு வந்து டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது, தி.மு.க., அரசு. ஆனால், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வர் பழனிசாமி, டெல்டா மாவட்டங்களை ஒன்றிணைத்து, வேளாண் மண்டலமாக அறிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால், தி.மு.க., அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் போட்டு, விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாக போலி வேஷம் போட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X