சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோழிசண்டை தகராறில் வாலிபரை கொன்றவர் கைது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், இம்ரான், 22. வெல்டிங் கடையில் பணியாற்றி வந்தார். மேலும் சண்டைக்கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரம் மற்றும் சண்டைக்கோழி பந்தய போட்டிகளில் பங்கேற்று வந்தார். சண்டைக்கோழி வாங்கிய விவகாரத்தில் இவருக்கும், கிருஷ்ணகிரி நேதாஜி சாலையை சேர்ந்த மார்கோ, 56, என்பவருக்கும் கடந்த, 14ல், தகராறு ஏற்பட்டு, இதில்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், இம்ரான், 22. வெல்டிங் கடையில் பணியாற்றி வந்தார். மேலும் சண்டைக்கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரம் மற்றும் சண்டைக்கோழி பந்தய போட்டிகளில் பங்கேற்று வந்தார். சண்டைக்கோழி வாங்கிய விவகாரத்தில் இவருக்கும், கிருஷ்ணகிரி நேதாஜி சாலையை சேர்ந்த மார்கோ, 56, என்பவருக்கும் கடந்த, 14ல், தகராறு ஏற்பட்டு, இதில் மார்கோ அவரது மகன் மணிமாறன், 30, ஆகியோர் இம்ரானை கத்தியால் குத்தி கொன்றனர். இது தொடர்பாக, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மார்கோ அவரது மகன் மணிமாறன் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், காமன்தொட்டி-பேரிகை சாலை உஸ்தனப்பள்ளி என்னுமிடத்தில், நேற்று மணிமாறனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மார்கோவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X