சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருதரப்பினர் இடையே தகராறு: 8 பேர் கைது; 26 பேருக்கு வலை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஓசூர்: ராயக்கோட்டை அடுத்த சஜலப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா, 21, விவசாயி; இவர், பந்தரப்பள்ளியை சேர்ந்த நாகேஷ், 23, என்பவரது உறவினரான, 16 வயது பிளஸ் 1 மாணவியை காதலித்தார். கடந்த, 24ல், மாணவி பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், நாகேஷ், 'வாட்ஸ் ஆப்' ஸ்டேடஸ் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதை பார்த்த மாணவி, சூர்யாவிடம் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த அவர், நாகேஷிடம் தொலைபேசியில்

ஓசூர்: ராயக்கோட்டை அடுத்த சஜலப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா, 21, விவசாயி; இவர், பந்தரப்பள்ளியை சேர்ந்த நாகேஷ், 23, என்பவரது உறவினரான, 16 வயது பிளஸ் 1 மாணவியை காதலித்தார். கடந்த, 24ல், மாணவி பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், நாகேஷ், 'வாட்ஸ் ஆப்' ஸ்டேடஸ் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதை பார்த்த மாணவி, சூர்யாவிடம் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த அவர், நாகேஷிடம் தொலைபேசியில் விசாரித்தார். இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் சஜலப்பட்டிக்கு அருகே, சூர்யா தன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அங்கு வந்த நாகேஷ் மற்றும் அவரது நண்பர்கள், சூர்யாவை பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதில் காயமடைந்தார். சூர்யா புகாரின்படி, நாகேஷ், 23, மணியங்கலை சேர்ந்த குமார், 25, மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த விஜய், 23, ஆருப்பள்ளியை சேர்ந்த விஜயகுமார், 25, கெட்டூரை சேர்ந்த மணிகண்டன், 20, கூழியத்தை சேர்ந்த மல்லேஷ், 21, ஆகிய, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 11 பேரை தேடி வருகின்றனர். அதேபோல், தன்னையும், தன் நண்பர்களையும் தாக்கியதாக நாகேஷ் கொடுத்த புகாரின்படி, சூர்யா, 21, அஜித்குமார், 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், 15 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X