பொது செய்தி

தமிழ்நாடு

எல்லையில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு: கண் துடைப்பிற்காக நடத்திய அதிகாரிகள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில், கொரோனா கண்காணிப்பு பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.தமிழக அரசு கடந்த, 23 முதல், மாநிலத்திற்கு இடையேயான பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியது. அதனால், ஓசூர், ஜூஜூவாடி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் இருந்த இ-பாஸ் நடைமுறை மற்றும் கண்காணிப்பு பணிகளை, அதிகாரிகள் கைவிட்டனர். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'மக்களை தேடி

ஓசூர்: ஓசூர், டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில், கொரோனா கண்காணிப்பு பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.


தமிழக அரசு கடந்த, 23 முதல், மாநிலத்திற்கு இடையேயான பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியது. அதனால், ஓசூர், ஜூஜூவாடி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் இருந்த இ-பாஸ் நடைமுறை மற்றும் கண்காணிப்பு பணிகளை, அதிகாரிகள் கைவிட்டனர். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'மக்களை தேடி மருத்துவம்' திட்ட செயல்பாடுகளை பார்வையிட நேற்று வந்தார். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர், மாநில எல்லையில் கொரோனா கண்காணிப்பு பணி நடப்பதுபோல் அமைச்சரிடம் காட்ட விரும்பினர். அதற்காக கடந்த மூன்று நாட்களாக, டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில், தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இப்பணியை, சுகாதார அமைச்சர் சுப்பிரமணி நேற்று மதியம் பார்வையிட்டார். அதிகளவு வாகனங்கள் கடந்து செல்லும் ஜூஜூவாடி, கக்கனூர், பூனப்பள்ளி சோதனைச் சாவடிகளில், கொரோனா கண்காணிப்பு பணி மேற்கொள்ளவில்லை. டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில் மட்டும், அமைச்சர் வருகைக்காக திட்டமிட்டு இப்பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X